வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இட்லி கடை படத்துக்கு தனுஷ் வாங்கும் சம்பளம்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வேண்டியது தான் போல

தனுஷ் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பிசியாக பல படங்களை இயக்கி வருகின்றார்.பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தன் முதல் படத்திலேயே வெற்றி கொடி நாட்டினார்.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாக உள்ளாரோ, அதே அளவுக்கு, இயக்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். ராயன் படத்தை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் தனது அக்கா பையனை சினிமாவில் அறிமுகம் செய்கிறார்.

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தற்போது இட்லி கடை படத்தையும் இயக்கியும் நடித்தும் வருகிறார் தனுஷ்

ஒரு நாள் சம்பளமே இவ்வளவா

சன் பிக்சர்ஸ் தனுஷை வைத்து மேலும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது. அப்படத்தை தனுஷே இயக்கவும் இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்திற்காக வேலைகள் இருபக்கம் நடைபெற்று கொண்டிருக்க இதற்கிடையில் தான் இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்காக தனுஷ் வாங்கி வரும் சம்பளம் பற்றிய விவரங்கள் வெளியாகிய நிலையில், அது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தனுஷ் இட்லி கடை படத்திற்காக ஐம்பது கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

மேலும், அவர் நடித்து வரும் படங்களில் நாள் ஒன்றிற்கு ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வந்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் தனுஷ் கண்டிப்பாக இட்லி கடை படத்திற்காக ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவார் என தெரிகின்றது.

Trending News