வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

2ம் பாதி சொதப்பினாலும் இசை புயலால் தல தப்பிய ராயன்.. 100 கோடியை தொடுமா? 4 நாள் வசூல் நிலவரம்

Raayan Collection: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் கடந்த 26 ஆம் தேதி வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ராயன் முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் இரண்டாம் பாதி முழுக்க அதிகபட்ச வன்முறை நிறைந்திருந்தது சில அதிருப்திகளையும் பெற்றது.

ஆனாலும் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறி இருக்கும் அடங்காத அசுரன் பாடல் இரண்டாம் பாதியை காப்பாற்றி விட்டது. அதிலும் ஏ ஆர் ரகுமானின் குரலில் உசுரே நீ தானே வரிகள் புல்லரிக்க செய்து விட்டது.

அண்ணன் தங்கை பாசத்தை அழகாக காட்டியிருக்கும் தனுஷ் இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அவருக்கு யானை பலம் போல் இருந்து தாங்கி பிடித்து இருக்கிறார் இசை புயல்.

ராயன் மொத்த வசூல் ரிப்போர்ட்

அதனாலேயே ராயன் தற்போது வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. அதன் படி முதல் நாளில் 14 கோடிகளை தட்டி தூக்கிய இப்படம் இரண்டாவது நாளில் 13 கோடியை வசூலித்திருந்தது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 15 கோடி கலெக்சன் ஆகியிருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று வேலை நாள் என்பதால் வசூல் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதன்படி நான்காவது நாள் 6 கோடியை ராயன் வசூலித்திருந்தது. ஆக மொத்தம் இந்திய அளவில் இப்படம் இதுவரை 48 கோடிகளை வாரி சுருட்டியுள்ளது.

மேலும் உலக அளவில் 75 கோடிகளை ராயன் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதனால் காத்தவராயனின் ஆட்டம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை வைத்துப் பார்த்தால் இன்னும் சில தினங்களில் ராயன் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் ஒரு இயக்குனராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கும் தனுஷ் இதன் மூலம் வெற்றி வாகை சூடி உள்ளார்.

அடங்காத அசுரனாக சொல்லி அடித்த தனுஷ்

Trending News