வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தியேட்டரை விட்டு வெளியேறும் இந்தியன் 2.. பாக்ஸ் ஆபிஸை கலக்க வரும் ராயன் அட்வான்ஸ் புக்கிங், முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Raayan: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் நாளை பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், காளிதாஸ் ஜெயராம் என பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் ஏ ஆர் ரகுமானின் இசையில் பாடல்களும் வெறித்தனமாக இருக்கிறது. மேலும் தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்கள் இதை கோலாகலமாக கொண்டாடுவதற்கு காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத்தை பொறுத்தவரையில் 50 லட்சத்துக்கு மேல் வசூல் ஆனது. அதைத்தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி ராயல் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் 5 கோடியை நெருங்கி விட்டது.

ராயன் முதல் நாள் வசூல்

இதை வைத்து பார்க்கும் போது உலக அளவில் ராயன் முதல் நாளில் 10 கோடியை தாண்டி வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தனுஷின் கர்ணன் முதல் நாளில் 10.40 கோடிகளை வசூல் செய்திருந்தது.

அதேபோல் கேப்டன் மில்லர் 8 கோடிகளை வசூலித்தது. அந்த வகையில் ராயன் படத்திற்கு தற்போது உலக அளவில் மிக பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் ஓப்பனிங் நாள் மற்றும் வார இறுதி நாட்களிலேயே இப்படம் 50 கோடி கிளப்பில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேலும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டை பொறுத்தவரை கொஞ்சம் டல்லாக தான் இருக்கிறது. தற்போது இந்தியன் 2 திரையரங்கை விட்டு வெளியேறு நிலையில் ராயன் உள்ளே வர இருக்கிறது. இது பாசிட்டிவ் விமர்சனங்களை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வசூல் வேட்டைக்கு தயாராகும் ராயன்

Trending News