Raayan Collection: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ஐம்பதாவது படமாக உருவான ராயன் நேற்று வெளியானது. எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
காத்தவராயன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் படம் முழுக்க ஆக்ஷனில் தெறிக்க விட்டுள்ளார். அவருக்கு இணையாக துஷாரா விஜயனின் கதாபாத்திரமும் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் அடங்காத அசுரன் பாடல் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. இதன் மூலம் ஏ ஆர் ரகுமான் இன்னொரு ஹீரோவாக ராயனை தாங்கிப் பிடித்துள்ளார். இப்படி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
இது படத்தின் வசூலுக்கும் ஒரு பிளஸ் ஆக மாறி இருக்கிறது. அதன்படி ராயன் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கில் ஆறு கோடி வரை வசூலித்திருந்தது. அதையடுத்து நேற்று முதல் காட்சிக்கு பிறகு தியேட்டரில் ஆடியன்ஸின் வரவும் அதிகரிக்க ஆரம்பித்தது.
அந்த வகையில் ராயன் முதல் நாளில் இந்திய அளவில் 12 கோடியும் உலக அளவில் 17 கோடியும் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை.
மேலும் சனி, ஞாயிறுகளில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆகஸ்ட் 15 தான் தங்கலான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது.
அதனால் ராயனின் வசூல் வேட்டை அடுத்த வாரம் தொடரும். அதன்படி 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ராயன் தனுஷின் முந்தைய பட வசூல் சாதனையை முறியடிக்கும் என்பது தற்போது வெளியாகும் விமர்சனங்களிலேயே தெரிகிறது.