புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனுஷை சுத்து போட்ட கூட்டம்.. நடிகையை அலேக்கா காப்பாற்றிய தனுஷ்

நடிகர் தனுஷ் படம் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு தனுஷ்-அனிருத் கூட்டணியில் படம் உருவாகியுள்ளது இதற்கு முக்கிய காரணம்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதி ராஜா ஆகியோர் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

Read Also : திருச்சிற்றம்பலம் தனுஷ்க்கு வெற்றியா.? தோல்வியா.? சினிமாபேட்டை ஒரு அலசல்

திருச்சிற்றம்பலம் வெளியான முதல் நாளே அதிகாலை ரசிகர்கள் தியேட்டரில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மக்களின் வரவேற்பு மற்றும் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ் தனது மகன்களுடன் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்துள்ளார்.

மேலும் தனுஷுடன் அனிருத் மற்றும் ராசி கன்னா ஆகியோரும் அந்த தியேட்டருக்கு வந்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் முன்பு திரண்டுள்ளனர். இதனால் செய்வதறியாமல் இருந்த தனுஷ் இவர்களிடமிருந்து ராசி கன்னாவை பத்திரமாக அழைத்து வரவேண்டும் என்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பில் அவரின் கையைப் பிடித்து வேகமாக ஓட்டம் எடுத்துள்ளார்.

Read Also : திருச்சிற்றம்பலம் தனுசுக்கு வெற்றியா, தோல்வியா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அதன் பிறகுதான் தியேட்டரின் உள்ளே மகன்கள் மற்றும் அனிருத் மாட்டிக்கொண்டு இருப்பது தனுஷுக்கு தெரியவந்துள்ளது. அதன் பின்பு மீண்டும் பவுன்சர்கள் சென்று அவர்களை பத்திரமாக தியேட்டரிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளனர்.

dhanush-rassi-khanna-1
dhanush-rassi-khanna-1

இந்நிலையில் தனுஷ் ராசி கான்னாவை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மேலும் சில ரசிகர்கள் நடிகையை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கவனத்தில் மகன்களை தனுஷ் மறந்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read Also : மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்

Trending News