டாணாக்காரன்’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘தனுஷ் 56’ திரைப்படம். அதிரடி கேங்ஸ்டர் கதையாக உருவாகும் இப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
தற்போது தனுஷின் நடுத்தர வயது தந்தை கதாபாத்திரம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் தனுஷ் காட்சியளிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் அவரது இளமைக்காலத் தோற்றம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.
‘அசுரன்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அழுத்தமான கிராமத்து ஆக்ஷன் கதையில் தனுஷ் களமிறங்கியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குநர் தமிழின் யதார்த்தமான திரைக்கதையும், தனுஷின் நடிப்பும் இணையும்போது ‘தனுஷ் 56’ திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




