Dhanush: தனுஷ் அடுத்த மூன்று வருடங்களுக்கு ரொம்பவும் பிஸி. இயக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் அவர் சவாரி செய்து வருகிறார்.
அடுத்தடுத்து அவருடைய படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் மற்றொரு செய்தியும் கசிந்துள்ளது. அதாவது அவர் தற்போது தன் மகனுக்காக கதை தேடி வருகிறாராம்.
தற்போது அவர் தன் அக்கா மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் அவர் தற்போது தன் மூத்த மகன் யாத்ராவுக்காக கதை கேட்க தொடங்கியுள்ளார். தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் எண்ணம்.
மகனுக்காக கதை தேடும் தனுஷ்
தற்போது அதற்கான நேரம் கூடியுள்ள நிலையில் நல்ல கதை, பெரிய ப்ரொடக்ஷன், பாப்புலர் இயக்குனர் என தேடி வருகிறாராம். அப்படி இல்லை என்றால் தன்னுடைய இயக்கத்திலேயே நடிக்க வைக்கலாமா என்ற யோசனையும் இருக்கிறதாம்.
ஆனால் இதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் சம்மதத்துடன் நடக்கிறதா என்று தெரியவில்லை. தற்போது கோலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வாரிசு நடிகர்கள் இருக்கும் நிலையில் விஜய் மகன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இதுவே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ரஜினி குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறை வர இருக்கிறது. இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் தனுஷ் தன் மகனை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்று தற்போது முடிவு செய்துவிட்டார். விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம்.