வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அந்த ஆதாரத்தால் சைலன்ட் மோடில் இருக்கும் தனுஷ்.. விடாமல் துரத்தும் சுசித்ரா

தமிழ் திரையுலகில் தற்போது எத்தனையோ சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் அதிகமாக சிக்குவது நடிகர் தனுஷ் தான். தன்னுடைய விவாகரத்து செய்தியை அறிவித்ததில் இருந்தே பாவம் மனுஷனுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.

அதில் பல வருடங்களாக அனைவரும் மறந்து போயிருந்த ஒரு விஷயம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா, தனுஷ் மீது ஏகப்பட்ட புகார்களை வைத்தார். மேலும் தனுஷின் திரைமறைவு லீலைகள் பற்றியும் அவர் பேசினார்.

அதில் சில போட்டோ ஆதாரங்களும் வெளிவந்து பகீர் கிளப்பியது. ஆனால் சிலநாட்களிலேயே சுசித்ரா மனநிலை சரியில்லாதவர் என்று கூறி அந்த விவகாரம் அப்படியே முடித்து வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தனுஷை காப்பாற்றியது அவரின் முன்னாள் மாமனார் சூப்பர் ஸ்டார் தான் என்ற ஒரு கருத்தும் அப்போது பரவியது.

ஆனால் இந்த விஷயத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார். அப்போதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் சிறுசிறு பிரச்சினைகள் எழுந்திருக்கிறது. அந்த விஷயம் தான் தற்போது பெரிய அளவில் வெடித்து விவாகரத்து வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் பயில்வான் சுசித்ரா குறித்து சில தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்தார். இதனால் சம்பந்தப்பட்ட இருவருக்கும் ஏகப்பட்ட சண்டை நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் சுசித்ரா, தனுஷ்தான் பயில்வானை இவ்வாறு தூண்டிவிட்டார் என்றும் கூறினார்.

இது என்ன புது பிரச்சனை என்று பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் தனுஷ் மட்டும் இந்த விஷயம் குறித்து இப்போது வரை சைலண்டாக இருக்கிறார். இதுதான் தற்போது பலருக்கும் ஒரு சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. அது என்னவென்று விசாரித்துப் பார்த்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது தனுஷ் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு வீடியோ ஆதாரம் சுசித்ராவிடம் இருப்பதாக திரையுலகில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அதனால்தான் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பிய போதும் தனுஷ், சுசித்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க தொடர்ந்து வரும் பிரச்சினைகளின் காரணமாக தான் தனுஷ் தற்போது எதற்காகவும் வாய் திறக்காமல் இருக்கிறார். மேலும் தேவையில்லாமல் சுசித்ரா விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று அவர் ஒதுங்கி இருப்பதாகவும் ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

Trending News