Simbu and Dhanush Favorite Actress: தனுஷ் மற்றும் சிம்பு ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் நுழைந்ததால் இருவருக்கும் இடையே நீயா நானா என்ற போட்டி நிலவியது. ஆரம்பத்தில் தனுசை விட சிம்பு ஒரு படி மேலே இருந்தாலும் தற்போது சிம்புவை விட தனுஷ் நடிப்பில் முந்தி கொண்டார். அதனால் தற்போது 50 வது படமான ராயன் படத்தை அவரை இயக்கி தயாரித்து இருக்கிறார். ஆனால் சிம்பு விட்ட இடத்தை பிடிப்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக போராடி வந்து கொண்டிருக்கிறார்.
இப்படி இவர்களுக்குள் இருந்த போட்டியின் காரணமாக ஒரே நடிகையை மாத்தி மாத்தி இரண்டு பேரும் படங்களில் கமிட் ஆக்கி நடிக்க வைத்தார்கள். அந்த நடிகையும் தமிழில் இவர்கள் இருவருடன் மட்டுமே நடித்துவிட்டு காணாமல் போய்விட்டார். அவர் வேறு யாருமில்லை தனுஷ் உடன் மயக்கம் என்ன படத்திலும் சிம்புக்கு ஜோடியாக ஒஸ்தி படத்திலும் நடித்து இருவரையும் கிரங்கடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.
மயக்கம் என்ன ஒஸ்தி பட ஹீரோயின்
தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்து முடித்த பிறகு பெருசாக வாய்ப்பு கிடைத்ததால் மறுபடியும் தெலுங்கு படத்திலேயே நடிக்கப் போய்விட்டார். ஆனால் அங்கேயும் இவருடைய நடிப்புக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் கல்யாணம் பண்ணி விடலாம் என்று முடிவு எடுத்து விட்டார்.
அத்துடன் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு பண்ணி அமெரிக்காவிற்கு போனார். போன இடத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிம்பு மற்றும் தனுசை பற்றிய அப்டேட்கள்
- அடுத்த 100 நாளுக்கு அதிக எதிர்பார்ப்பை கிளப்பி வெளிவர உள்ள 6 படங்கள்
- Simbu: சிம்புவை நம்பி பிரயோஜனம் இல்ல
- Dhanush: தனுஷோட அந்த சோகமான பாட்டுல வேலை பார்த்த 4 பேருக்கும் விவாகரத்து