வடசென்னை 2 சூட்டிங்குக்கு தேதி குறிச்சாச்சு.. எதிரிக்கு எதிரி நண்பன் என கூட்டு சேர்ந்த பெரும்புள்ளி!

Vadachennai: எதிரிக்கு எதிரி நண்பன் என வடசென்னை 2 படத்திற்காக புதிய கூட்டணி ஒன்று உருவாகி இருக்கிறது. தனுஷ் இடம் அவருடைய ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வட சென்னை 2 படத்தை தான்.

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் இதுவரை வெளியான படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் படங்கள் தான். இதில் முக்கியமான படம் என்றால் அது வடசென்னை.

சூட்டிங்குக்கு தேதி குறிச்சாச்சு

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் தனுசுமே இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது பற்றி முடிவெடுத்திருந்தார்கள். மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்த இரண்டாம் பாகத்தின் மீது எப்போதுமே இருக்கிறது.

தொடர்ந்து வெற்றிமாறனாக இருக்கட்டும் அல்லது தனுஷ் ஆக இருக்கட்டும் எந்த மேடை ஏறினாலும் கண்டிப்பாக வட சென்னை 2 இருக்கிறது என்று உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தற்போது இந்த படம் வரும் 2027 ஆம் வருடம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மேலும் வட சென்னை இரண்டாம் பாகத்தை இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஐசரி கணேசன் அக்ரிமெண்ட் போட்டிருந்தார்.

ஆனால் அதற்கு டிமிக்கி கொடுத்து விட்டு ரெட்கார்டு வரை போய்விட்டார் சிம்பு. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் தற்போது சிம்பு கைவிட்டதால் ஐசரி கணேசன் தனுஷ் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →