திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தலைவர் பிறந்தநாளில் தனுஷ் போட்ட ட்வீட்.. மாமனாரை விடாமல் தாஜா பண்ணும் மருமகன்

Dhanush Tweet: இன்று சூப்பர் ஸ்டார் தன்னுடைய 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதில் தனுஷ் போட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.

ரஜினியின் மூத்த மருமகனான இவர் இப்போது அந்தஅந்தஸ்திலிருந்து விலகி இருக்கிறார். ஆனாலும் நான் தலைவரின் ரசிகன் என்பதை அவர் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

Also read: விஜய், சூர்யா அளவிற்கு பிசினஸில் கொட்டும் பனமழை.. தனுஷின் கேப்டன் மில்லருக்கு அடித்த ஜாக்பாட்

அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை தனுஷ் பார்த்தது பயங்கர ட்ரெண்டானது. அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் இவர் முதல் ஆளாக தன்னுடைய பதிவை போட்டு விடுவார்.

அதன்படி இன்றும் ஹாப்பி பர்த்டே தலைவா என்று அவர் தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதை தனுஷின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் தலைவரை எங்க அண்ணன் விட்டுக்கொடுக்க மாட்டார் எனவும் கூறி வருகின்றனர்.

Also read: இப்ப வர ரஜினி தலையை உருட்டிய முக்கியமான 6 பிரச்சனைகள்.. சைக்கோவாக திரிந்த காலங்கள்

உண்மையில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே தனுஷ் ரொம்பவும் அமைதியாகிவிட்டார். ஆனால் ரஜினியின் பட அறிவிப்பு வெளிவந்தாலோ அல்லது வேறு எந்த செய்தியாக இருந்தாலும் தனுஷ் முதல் ஆளாக கமெண்ட் கொடுத்து விடுவார்.

இதிலிருந்தே அவர் மாமனாரை தாஜா பண்ணுவது வெளிப்படையாக தெரிகிறது. ஏனென்றால் இந்த விவாகரத்து விஷயத்தில் ரஜினி சமாதானப்படுத்தியும் தனுஷ் தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அதனாலேயே முன்னாள் மாமனாரின் கோபத்தை தணிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இந்த மருமகன்.

dhanush-tweet
dhanush-tweet

Trending News