தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படத்திற்கு இப்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதில் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தை பார்த்த பலரும் தனுஷின் நடிப்பு வழக்கம் போல நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Also read: இயக்குநர்களை நம்பி மோசம் போன டாப் 3 ஹீரோக்கள்.. மரண பயத்தில் வாத்தி தனுஷ்
அதற்கு அடுத்தபடியாக மீனாட்சி டீச்சராக நடித்திருக்கும் சம்யுக்தாவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதாவது கல்வித்துறை பற்றிய அழுத்தமான கருத்தை இப்படம் தெரிவித்துள்ளது ஆடியன்ஸை பெருமளவில் இம்ப்ரஸ் செய்திருக்கிறது. மேலும் படத்தின் இரண்டாம் பாதி ரொம்பவும் எமோஷனலாக இருக்கிறது.

அதிலும் கல்வியை வைத்து சமுத்திரகனி காட்டும் வில்லத்தனம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் சோசியல் மெசேஜை கூறியிருக்கும் இந்த வாத்தி திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது. அதிலும் இதன் மூலம் தனுசுக்கு தெலுங்கில் நல்ல ஒரு ஓப்பனிங் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: தனுஷை தவிர வேற யாருக்கும் செட் ஆகாத 5 கதாபாத்திரங்கள்.. நடிப்புக்கு நீ தான் அசுரன்
அந்த வகையில் தற்போது இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என எஸ் ஜே சூர்யா உட்பட பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவே இப்படத்திற்கான கொண்டாட்டம் ஆரம்பித்த நிலையில் தற்போது ரசிகர்கள் இதை திருவிழா போல் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
