திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்

நடிகர் தனுஷ் உண்மையான உழைப்பிற்கு உதாரணமாக இருக்கும் ஒரு நடிகர். சினிமாவுக்கு வந்த புதிதில் எந்த அளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாரோ, அதைவிட பல மடங்கு இன்று பேரும் புகழுடனும் இருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமா வரை இவர் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார்.

சினிமாவில் வளரும் நாயகனாக இருக்கும் போதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து, ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்தார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கும் நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமண உறவை முறித்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Also Read: ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

தனுஷின் சொந்த வாழ்க்கை அவருடைய சினிமா வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. திருமண முறிவுக்கு பின்னரும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்து தான் வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் வரிசையில் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்களுக்கு பயங்கர அட்வைஸ் மழையையும் பொழிந்து வருகிறார்.

ஆனால் அவ்வளவு எளிதாக தனுஷின் சொந்த வாழ்க்கையை கடந்து விட முடியாது. இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது ரொம்பவும் சர்ச்சைக்குரிய ஒன்றுதான். அவருடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் தனுஷுடன் நடித்தாலே அந்த நடிகைகளுக்கு விவாகரத்து ஆகிவிடும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகியது. அது உண்மை என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நிறைய சம்பவங்களும் நடந்து இருக்கின்றன.

Also Read: அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

நடிகர் தனுஷின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் நடிகர் கார்த்திக். இவர் யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார். அதிலிருந்து சில வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கின் மனைவி பாடகி சுசித்ரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனுஷ் தன்னை தவறாக கையாள முயன்றதாகவும், அதனால் தனக்கு ஏற்பட்ட காயங்கள் என்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவர் அதை பகிர்ந்து ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருடைய டிவிட்டரை வேறொருவர் ஹாக் செய்து விட்டதாகவும் கார்த்திக் அறிவித்திருந்தார்.

அந்த சமயத்தில் சுச்சி லீக்ஸ் என்று ட்விட்டரில் பாடகி சுசித்ரா பயங்கரமாக ட்ரெண்ட் ஆகினார். நிறைய நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்களை இவர் வெளியிட்டார். இதெல்லாம் நடந்து ஒரு சில மாதங்களிலேயே கார்த்திக் மற்றும் சுசித்ரா விவாகரத்து பெற்று விட்டனர். ஆனால் இவ்வளவு நடந்தும் தனுஷ் இந்த சம்பவத்தை பற்றி வாயை திறக்கவும் இல்லை மறுப்பும் தெரிவிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் நடிகை அமலா பால் மற்றும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி போன்றவர்களின் விவாகரத்திற்கு கூட தனுஷ் தான் காரணம் என்று அப்போது செய்திகள் பரவின.

Also Read: கிடப்பில் போட்ட கதையை கையில் எடுத்த தனுஷ்.. பாகுபலி போல் தாக்கத்தை ஏற்படுத்த போகும் படம்

Trending News