திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் நானே வருவேன் படம் வெளியாகி இருந்தது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். மேலும் தனுஷ் ஹீரோ, வில்லன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார்.

இந்நிலையில் படம் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் வசூலை பெற்று தரவில்லை. ஏனென்றால் நானே வருவேன் ரிலீசுக்கு மறுநாள் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தினால் தனுஷுக்கு பலத்த அடி விழுந்தது.

Also Read : வாழ்நாள் வசூலை 3 நாட்களில் குவித்த பொன்னியின் செல்வன்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி

மேலும் சில இடங்களில் நானே வருவேன் படத்தை தூக்கி விட்டு பொன்னியின் செல்வன் படத்தை திரையிட்டு வருகிறார்கள். இதனால் நானே வருவேன் படம் நன்றாக இருந்தும் பொன்னியின் செல்வன் படத்தால் வரவேற்பு கிடைக்காமல் போய் உள்ளது. இதனால் கிடப்பில் போட்ட படத்தை செல்வராகவன் கையில் எடுத்துள்ளார்.

நானே வருவேன் படத்திற்கு முன்பே செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் ராயன் என்ற படம் உருவாக இருந்தது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் கேங்ஸ்டர் ஜானரில் இந்த படத்தை உருவாக்க செல்வராகவன் திட்டமிட்டு இருந்தார். மேலும் இந்த படம் புதுப்பேட்டை 2 என கூறப்பட்டது.

Also Read : இரட்டை வேடத்தில் சைக்கோ தாண்டவம் ஆடிய தனுஷ்.. நானே வருவேன் முழு விமர்சனம்

ஆனால் சில காரணங்களினால் ராயன் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பிறகு தான் செல்வராகன், தனுஷ் கூட்டணியில் நானே வருவேன் படம் உருவாகி இருந்தது. இப்போது நானே வருவேன் படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறாததால் உடனடியாக ராயன் படத்தை செல்வராகவன் எடுக்க உள்ளார்.

மேலும் நானே வருவேன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு ராயன் படத்தை தயாரிப்பார் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த செய்தி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : யுவன்-தனுஷ் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. குத்தாட்டம் போட வைத்த ரவுடி பேபி

Trending News