ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என்னாதிது.. உம்ஹும்ம்.. ஜோடியா சுற்றிக்கொண்டே நாடகத்தை போடும் பெரிய வீட்டு மருமகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் புதிய படமான வேட்டையன் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன், படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த படத்தின் முதல் நாள் காட்சியை ரசிகர்களை போல் பல்வேறு பிரபலங்களும் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளனர். அந்த வகையில், ரஜினிகாந்த் மனைவி லதா, அவரது மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோரும் உடன் இருந்தனர். ஐஸ்வர்யாவுடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

இப்படி இருக்க, மறுபக்கம் நடிகர் தனுஷும் வேட்டையன் படம் பார்ப்பதற்காக ரோகிணி சில்வர் ஸ்கீரினுக்கு தனியாக வந்துள்ளார். இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “வேட்டையன் டே, சூப்பர்ஸ்டார் தலைவர் தரிசனம்” என பதிவிட்டிருந்தார்.

சந்தடி சாக்கில், மனைவியை சைட் அடித்த தனுஷ்

காதலியை சைட் அடிப்பது ஒரு ஆனந்தம் என்றால், சொந்த மனைவியை சைட் அடிப்பது வேற லெவல் வைப்.. அதை தான் தனுஷ் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே திரையரங்கில் வேட்டையன் படத்தை பார்த்து ரசித்துள்ளனர். தலைவர் தரிசனம் என்று ட்வீட் போட்டு விட்டு ஆசை மனைவியையும் தரிசிக்க வந்துள்ளார்

இதை தொடர்ந்து ரசிகர்கள், தலைவர் படத்துக்கு ஒன்றாக வருவதும் எல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லையா? உங்களுக்கும் பிரிய விருப்பம் இல்லை.. எங்களுக்கும் இல்லை.. நேரத்தையும் காலத்தையும் வீணடிக்காமல், தலைவருக்காகவாது, ஒன்று சேர்ந்து விடுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க துவங்கி விட்டனர்.

Trending News