திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காஸ்ட்லி ஷூ உடன் வலம் வரும் தனுஷ்.. நீண்ட தாடியுடன் கேப்டன் மில்லர் படத்தின் நியூ லுக்

தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படம் பிரிட்டிஷ் கால படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதில் கேப்டன் மில்லர் ஆக நடிக்கும் தனுஷின் நியூ லுக் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் நீண்ட தாடியுடன் தனுஷ் வித்தியாசமான லுக்கில் உள்ளார். அத்துடன் இவர் அணிந்திருக்கும் ஷூ மட்டும் 80 ஆயிரமாம்.

Also Read: அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்

இவ்வளவு காஸ்ட்லியான Balenciaga பிராண்டட் ஷூ அணிந்திருக்கும் தனுஷை பலரும் வியந்து பார்க்கின்றனர். ‘இந்த 80 ஆயிரம் மட்டும் இருந்தால் சின்ன கடையை போட்ருப்பேனே!’ என்றும்’ 80 ஆயிரத்துக்கு 80 ஷூ வாங்கி இருக்கலாம்!’ என்றும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமானது  1930-40களில் நடக்கும் கதையாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் தனுசுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அவர்களுடன் இப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார்.

Also Read: கேப்டன் மில்லர் படத்துக்கு வந்த சோதனை.. பல கோடி நஷ்டத்தில் தயாரிப்பாளர்

ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முடிந்துவிட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் ஆகியவை தற்போதே 120 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. எனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தனுஷின் நியூ லுக் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.

நீண்ட தாடியுடன் கேப்டன் மில்லரின் நியூ லுக்

captain-miller-dhanush-new-look
captain-miller-dhanush-new-look

Also Read: மாமனார் வில்லனை தட்டி தூக்கிய தனுஷ்.. கேப்டன் மில்லரில் நடக்கப் போகும் சம்பவம்

Trending News