தனுஷின் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் தற்போது ஜோராக ஆரம்பித்துள்ளது. இதில் இன்னும் சுவாரசியத்தை கூட்டம் வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
Also read: 25 லட்ச ரூபாய்க்கு கொக்கி போட்ட லலித்.. கரும்பு திங்க கூலி எதற்கு என பட்டறையை போட்ட தனுஷ்
இன்று பூஜை போடப்பட்டிருக்கும் இந்த படம் பற்றிய மற்ற தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த பட பூஜையின் ஃபோட்டோ சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் தனுஷ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தாடியுடன் இருக்கிறார்.
தனுஷ் அடுத்த பட பூஜை
அவருடைய இந்த கெட்டப்பை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த போட்டோ சில அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஏற்கனவே தனுஷ் தெலுங்கு இயக்குனரின் வாத்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர் தெலுங்கு இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது சில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also read: மாமனார் வில்லனை தட்டி தூக்கிய தனுஷ்.. கேப்டன் மில்லரில் நடக்கப் போகும் சம்பவம்
அது மட்டுமல்லாமல் சமீப காலமாக தனுஷ் தெலுங்கு திரையுலகுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் சென்னையில் இருப்பதை விட அவர் ஹைதராபாத்தில் தான் அதிக நேரம் இருந்து வருகிறார். இதுவே சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த செய்தியும் தமிழ் திரையுலகில் சிறு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் வரை பிரபலமாக இருக்கும் தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் திரையுலகை மறந்து வருவதாகவும், தெலுங்கு பக்கம் அவர் அதிகமாக கல்லாகட்டி வருவதாகவும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. ஆனாலும் தனுசுக்கு தமிழ் சினிமா தான் முக்கியம் என்று ரசிகர்கள் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Also read: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹீரோவுக்கு வலைவீசிய தனுஷ்.. சினிமாவிலும் நீயா நானா போட்டு பார்த்துருலாம்!