திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொங்கலுக்கு ரிலீசான தனுஷின் 5 படங்கள்.. மூன்று தோல்வி படங்களை தொடர்ந்து கேப்டன் மில்லர் வெற்றி பெறுமா?

Dhanush Movies: பொதுவாக பண்டிகை நாட்களை ஒட்டி முன்னணி நடிகர்கள், படங்களை வெளியிடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. அதற்கு காரணம் அந்த நேரத்தில் விடுமுறை நாட்கள் கிடைப்பதால் குடும்பத்துடன் சேர்ந்து நேரத்தை செலவழிக்கும் விதமாக ஒட்டுமொத்தமாக திரையரங்குகளுக்கு திரண்டு வருவார்கள். அதன் மூலம் வசூலில் பெருத்த லாபத்தை அள்ளிவிடலாம் என்ற நோக்கத்தில் தான்.

இதை மனதில் வைத்துக் கொண்டுதான் தனுஷின் நான்கு படங்களை பொங்கலை குறிவைத்து வெளியிட்டு இருக்கிறார். அப்படி வெளிவந்த படம் தான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன். இப்படம் 2004 ஆம் ஆண்டு எஸ் எஸ் ஸ்டான்லி இயக்கத்தில் தனுஷ் மற்றும் அபர்ணா பிள்ளை நடிப்பில் வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் தைப்பொங்கலை முன்னிட்டு குட்டி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சராசரியான வெற்றியை பெற்றது. இதே மாதிரி அடுத்த ஆண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் டாப்ஸி நடிப்பில் ஆடுகளம் படம் வெளிவந்தது.

Also read: சிவகார்த்திகேயனிடம் அசிங்கப்பட போகும் தனுஷ்.. தூக்கி வளர்த்த கடா எட்டி உதைக்க போகுது

இப்படம் விமர்சனத்தியாகும் வணிக ரீதியாகவும் மக்களை கவர்ந்து சிறந்த இயக்குனர் என்கிற அடையாளத்தை வெற்றிமாறனுக்கு தேர்ந்தெடுத்து கொடுக்கும் அளவிற்கு மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா நடிப்பில் பட்டாசு திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் அளவிலும் தோற்றுப் போய்விட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு பொங்கலை குறிவைத்து வித்தியாசமான லுக் உடன், வன்முறையை அதிகமாக வைத்து ஒரு பீரியட் படமாக கேப்டன் மில்லர் படத்தை இறக்குகிறார். அந்த வகையில் தனுஷ் பொருத்தவரை இதுவரை பொங்கலுக்கு வெளியிட்ட படங்களில் மூன்று படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் இதை மாற்றும் விதமாக கேப்டன் மில்லர் படம் நிச்சயமாக வெற்றியை தழுவும் என்கிற நம்பிக்கையில் இறக்குகிறார்.

Also read: அச்சு அசல் இளம் வயது ரஜினியாகவே மாறிய தனுஷின் மூத்த மகன்.. வைரலாகும் புகைப்படம்

Trending News