புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனுஷ் பட நடிகைக்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

Dhanush Actress Engagement: புதுமுக நடிகைகள் ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்றால் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்து விட்டால் போதும் மக்களிடம் பரிச்சியம் ஆகி விடுவார்கள். அப்படித்தான் தனுஷ் படத்தில் நடித்த நடிகை தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மேகா ஆகாஷ்.

இவர் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை, குட்டிக்கதை, யாதும் ஊரே யாவரும் கேளிர், சபாநாயகன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

சிம்பு தனுஷ் பட நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம்

meha akash
meha akash

ஆனால் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் படத்திலும் நடித்தார்.

ஆனால் இந்த படங்களும் பெருசாக வெற்றி பெறாததால் சினிமா நமக்கு செட்டாகாது என்று நடிப்பதற்கு முழுக்க போட்டுவிட்டு நீண்ட நாள் காதலித்து வந்த காதலனை கரம் பிடிக்க முடிவெடுத்து விட்டார். இவர்களுடைய காதலுக்கும் பெற்றோர்கள் சம்மதம் கொடுத்த நிலையில் நேற்று கேரளாவில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

மேகா ஆகாசுக்கு நேற்று நடந்த நிச்சயதார்த்தம்

meha akash engagement
meha akash engagement

இவர் காதலித்த காதலன் சாய் விஷ்ணு யார் என்றால் பிரபல அரசியல்வாதியின் மகன் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றி விட்டதாகவும் சமூக வலைதளத்தில் பதிவு போட்டு நிச்சயதார்த்தம் ஆன புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கூடிய விரைவில் கல்யாண தேதியும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு இடையில் தெலுங்கு படத்தில் கமிட்டாகி இருக்கும் இரண்டு படங்களில் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது.

Trending News