கோலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தனுஷ், தற்போது பல சுவாரஸ்யமான படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார்.அந்த வரிசையில்,‘லப்பர் பந்து’படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘D56’.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமான தனுஷ் படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்காகப் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.படத்தின் அடுத்தகட்டப் பணிகளையும் விரைவாக முடித்து, திட்டமிட்டபடி வெளியீட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும்,இப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’மற்றும் ‘பவர்ஹவுஸ்’ஆகிய படங்களுடன் கோடை விடுமுறை வெளியீட்டுப் போட்டியில் தனுஷின் ‘D56’படமும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில்,ஏப்ரல் 30ஆம் தேதி அல்லது மே மாதத்தில் இப்படத்தை வெளியிடுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.இருப்பினும்,இதுவரை அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை.
தனுஷ்,தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடை விடுமுறையில் வெளியாகும் படங்களுக்கிடையே ‘D56’எந்த அளவுக்குப் போட்டியை உருவாக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




