வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வரிசைக்கட்டி நிற்கும் தனுஷின் பிரச்சனைகள்.. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

நடிகர் தனுஷ் அண்மைக்காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். அதிலும் அவரது விவாகரத்துக்கு பின்பாக பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் உள்ளது. உதாரணமாக அவரது படங்கள் ரிலீஸாவது முதல் ஹிட்டாவது வரை பல போராட்டங்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இந்தாண்டு தீபாவளிக்குள் இப்படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிலும் உள்ளூர் அரசியல் தலையீடு பிரச்சனை வந்து அதுவும் பல போராட்டங்களுக்கு பின் சரி செய்யப்பட்டது. அந்த வகையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மீது வழக்கு தொடரப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை உலுக்கிய விஷயம் தற்போது மீண்டும் பூதகரமாய் வெடித்துள்ளது.

Also Read: கல்லா கட்ட பலே திட்டம் போட்ட தனுஷ்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மதுரையை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தமபதியர், மதுரை மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் தொடுத்த வழக்கால் அந்த அச்சமயத்தில் தனுஷ் மற்றும் ரஜினியின் குடும்பத்தார் ஆடிப்போனார்கள். அந்த வகையில் அத்தம்பதியினர் தொடுத்த வழக்கில், தனுஷ் எங்களது மூன்றாவது மகன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் வீட்டை விட்டு தனுஷ் ஓடிவிட்டார் என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் மாதம் 65000 ருபாய் பெற்றோர்களாகிய தங்களுக்கு தனுஷ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜரானார். இதை தொடர்ந்து போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனாலும் அத்தம்பதியினர் தனுஷ் படித்த பள்ளி சான்றிதழை வைத்து மேல் முறையீடு செய்தனர்.

Also Read: ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. கரும்பு மிஷினில் மாட்டிய கதையான நடிகரின் நிலை

ஆனால் அந்த சான்றிதழில் சரியான பதிவு எண் இல்லாததால் போலி சான்றிதழ் என நிரூபிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து மான நஷ்ட ஈடாக 10 கோடி வரை கொடுக்குமாறு வழக்கு தொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்குமாறு அத்தம்பதியினர் கூறிய நிலையில், தனுஷ் தரப்பு வழக்கறிஞர்கள் அதனை நிராகரித்தனர்.

இதனிடையே தற்போது கதிரேசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதால், தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்குமாறு அவரது மனைவி மீனாட்சி கூறிவருகிறார். மேலும் தனுஷ் தங்களது மகன் தான் என்றும், அவர் சொன்னது போல் எங்களிடம் பத்து கோடி ரூபாய் கேட்டு இன்றுவரை மான நஷ்ட வழக்கும் தொடுக்கவில்லை. இதிலிருந்தே தனுஷ் எங்களது மகன் தான் என உறுதியாவதும், அவர் பொய் கூறி வருகிறார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தம்பதியினர் புது வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.

Also Read: மாமனாரை ஓரங்கட்டிய மருமகன்.. விஜய், அஜித் செய்யாததை செய்து ரஜினியை தலை நிமிரச் செய்த தனுஷ்

Trending News