Actor Dhanush: இன்று காலையிலிருந்து சோசியல் மீடியா பயங்கர அளப்பறையாக இருக்கிறது. டாப் ஹீரோக்களின் புது பட அப்டேட்டுகள் ஒரு பக்கம் பிரம்மாண்ட படங்களின் போஸ்டர் ஒரு பக்கம் என கலை கட்டி வருகிறது.
போஸ்டர் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்
அதன்படி கங்குவா படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதேபோல் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் பட்டையை கிளப்பி இருக்கிறது.
ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்
அந்த வரிசையில் தனுஷ் தற்போது ஒரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆரவாரப்படுத்தி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் தனுஷின் 50வது படம் என்பதும் கூடுதல் சிறப்பாக உள்ளது. அந்த வகையில் தற்போது தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோர் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளிவரும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. அதைத்தான் தற்போது தனுஷ் ரசிகர்கள் ஃபயர் விட்டு கொண்டாடி வருகின்றனர்.