சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

காசிமேடு தான் தனுஷின் ராயனா? வாங்குன காசுக்கு மேல கூவும் இயக்குனர்!

Dhanush’s Rayan is director Selvaragavan’s Kasimedu story: கேப்டன் மில்லர் வெற்றிக்குப் பின் தனுஷ் தொடர்ந்து சில படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். முன்னணி இயக்குனர்களான சேகர் கம்லா மற்றும் ஹச் வினோத்துடன் பான் இந்தியா படத்தில் கைகோர்த்து உள்ள தனுஷ் அவரது D50 ஆன ராயன் படத்தை அவரே நடித்து இயக்கவும் செய்கிறார். ஏற்கனவே பா பாண்டி மூலம் இயக்குனரான தனுஷ், தனது இந்த ராயன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி வருகிறார் என்றே கூறலாம்.

சமீபத்தில் வெளியான ராயன் போஸ்டர் அட்டகாசமான லுக்குடன் பார்வையாளர்களை தெறிக்க வைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் மிரட்டலான நடிப்பில் காளிதாஸ் மற்றும் சந்திப் கிஷன் துணையுடன் சூப்பர் கேங்ஸ்டர் கதையுடன் ஆக்ஷனில் தெறிக்க விட வருகிறார் காத்தவராயன் என்கின்ற இந்த ராயன்.

அஜித், தனுஷ் மற்றும் பரத் இணையவிருந்த படம் தான் தற்போது ராயன் என்று கோலிவுட்டில் பல தகவல்களும் பரவி வந்த நிலையில்  இது பற்றிய விளக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார் இந்த கதையின் காரணகர்த்தா.

Also read: வடசென்னை போல் சம்பவத்திற்கு தயாரான தனுஷ்.. மரண மாஸாக வந்திருக்கும் D50 போஸ்டர்

காதல் கொண்டேன் மூலம் அறிமுகமாகி  7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  போன்ற வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன். இவர் அனுஷ்கா, ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு பின்  அஜித்துடன் அடுத்த ப்ராஜெக்ட்டில் இணையவிருந்தார்.

அஜித் அண்ணனாகவும் தனுஷ் மற்றும் பரத் தம்பியாகவும் நடிக்க புதுப்பேட்டை போன்ற  ஜனரில் “காசிமேடு” என்கின்ற தரமான ஆக்சன் படத்தை இயக்க இருந்தார். இரண்டாம் உலகம் தோல்விக்கு பின் இந்த படம் கைவிடப்பட்டது. பின்னால் இயக்கலாம் என்றாலும் இனி இதில் அஜித் நடிப்பதாக இல்லை.

இதே காசிமேடு கதையை காலத்திற்கு ஏற்றார் போல் பட்டி டிங்கரிங் செய்து ராயனாக ரெடி பண்ணி விட்டார் தனுஷ். இதில் தான் ஒரு நடிகனாக மட்டுமே நடிக்க இருப்பதாகவும் இது என்னுடைய கதை அல்ல. இது தனுஷின் ட்ரீம் ப்ராஜெக்ட். என ஏக போகமாக தனுஷை புகழ்ந்து தள்ளுகிறார் அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன்.

Also read:  மார்க்கெட் இருக்கும் போது காணாமல் போன 5 நடிகைகள்.. தொலைந்தே போன செல்வராகவன் ஹீரோயின்

Trending News