வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குருவுடன் மோதும் தனுஷ்.. வாத்தி உங்க புத்தியை காமிச்சிட்டிங்களா

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்களுக்கு பிறகு தற்போது வாத்தி என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் கடந்த 2003 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அவருடைய முதல் படத்தை இயக்கியதே அவருடைய அண்ணன் செல்வராகவன் தான். சினிமாவுக்கு வந்த புதிதில் தனுஷின் மீது நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமே இருந்தது. இதற்கு அவருடைய மெலிந்த தோற்றமும் ஒரு காரணம்.

Also Read: அப்ப அது வதந்தி இல்லையா உண்மைதானா.. பல கோடி வியாபாரமான கேப்டன் மில்லருக்கு வந்த சோதனை

நடிகர் தனுஷ் ஏற்கனவே அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும் தனுஷ்- செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் தான் தனுசுக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அவருக்கு நிறைய ரசிகர்களும் அதிகரித்தனர்.

இன்று தனுஷ் ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். அவருடைய நடிப்பில் வெளியான மயக்கம் என்ன, அசுரன், வடசென்னை போன்ற படங்கள் எல்லாம் அவருடைய சிறந்த நடிப்பிற்கு எடுத்துக்காட்டுகள். இன்று கோலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் சினிமாவில் வர ஒரு பெரிய காரணமே அவருடைய அண்ணன் செல்வராகவன் தான்.

Also Read: தனுஷ் படத்தோடு முடிந்த சகாப்தம்.. வாய்ப்புக்காக கணவரை தூது விட்ட நடிகை

ஆனால் சில வருடங்களாகவே செல்வராகவன் பொருளாதார ரீதியாகவே சில கஷ்டங்களில் இருக்கிறார். தனுஷ் அவருடைய குருவை கண்டுகொள்ளவே இல்லை என்று நெட்டிசன்களும் தங்களுடைய விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதற்கிடையில் செல்வராகவன் படம் இயக்குவதில் இருந்து விலகி நடிக்கவும் ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் செல்வராகவன் மோகன். ஜி இயக்கத்தில் பகாசூரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் தனுஷ் அவருடைய வாத்தி திரைப்படத்தையும் ரிலீஸ் செய்கிறார். . இந்தப் போட்டி சற்றுமே எதிர்பார்க்காத ஒன்று என்றாலும் அண்ணன் தம்பி இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Also Read: சூர்யாவை பாலோ செய்த நடிகர் தனுஷ்.. சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சம்பவம்

Trending News