புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அசுரத்தனமா தனுஷ் செய்யும் வேலை.. நாகார்ஜுனா மட்டுமல்ல மொத்த அக்கட தேசமும் மண்டியிட்ட சம்பவம்

Actor Dhanush: இந்தாண்டு பொங்கலை ஒட்டி தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் அளவில் எந்தவித நஷ்டமும் இல்லாமல் ஓடி விட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷின் 50வது படமான ரயான் படத்தை அவரை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனுஷின் 51வது படத்தை கடந்த வருடம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்தார்கள். அதன்படி தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இப்படம் தெலுங்கு படம் என்பதால் இவருடன் சேர்ந்து நாகார்ஜுனாவும் கமிட் ஆகி இருக்கிறார்.

அத்துடன் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் இருவருக்கான காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிச்சாச்சு. தற்போது தனுஷ் மற்றும் நாகார்ஜுனா காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் எல்லாமே செண்டிமெண்டாக இருப்பதால் சூட்டிங் ஸ்பாட்டில் இரண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்ல என்பதற்கு ஏற்ப நடிப்பை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

Also read: நடக்க கூடாதுன்னு நினைத்ததை பிள்ளையார் சுழி போட்ட இளையராஜா.. தனுஷ் பிரண்டுக்கு காட்டிய பச்சக்கொடி

இவர்களுடைய நடிப்பை பார்த்து அங்கு இருப்பவர்கள் ஆச்சிரியத்தில் கண்ணிமைக்காமல் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் மொத்த அக்கட தேசமும் இவர்களுடைய எமோஷனல் காட்சியை பார்த்து கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு ரொம்பவே எதார்த்தமாக இருக்கிறதாம். இவருடைய நடிப்பை பார்த்து அங்கு இருப்பவர்கள் அனைவரும் அசுரத்தனமான நடிப்பு என்று மண்டியிட்டு வர்ணித்து உள்ளார்கள்.

சும்மாவே தனுஷ் அசுரத்தனமான நடிப்பை கொடுப்பார், இதுல வேற நாக அர்ஜுனாவும் இருக்கிறார் என்றால் அவரை விட பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்று அதற்கு ஏற்ற மாதிரி மெனக்காடு செய்து நடிப்பை கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆக மொத்தத்தில் தனுஷுக்கு வருகிற வருடம் வெற்றியாகத்தான் இருக்கும் என்பதற்கு ஏற்ப ரயான் மற்றும் தெலுங்கு படம் உருவாகி வருகிறது.

Also read: 2 வருஷத்துக்கு இந்த பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஜே சூர்யா போடும் ஆர்டர்.. கைவசம் இவ்வளவு படங்களா.!

Trending News