புதன்கிழமை, மார்ச் 19, 2025

ஒர்க் அவுட் ஆகாத கெமிஸ்ட்ரி.. எரிச்சலடைய வைத்த தர்ஷன், லாஸ்லியா

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து, முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பா. சயின்ஸ் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ரசிகர்கள் தற்போது கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். சயின்ஸ் படத்திற்கான எந்தவித பிரம்மாண்டமும் இல்லாமல் சென்டிமென்ட் காட்சிகளை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர தவறி இருக்கிறது.

மேலும் படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட தர்ஷனின் நடிப்பு இந்த படத்தில் பரவாயில்லை ரகம்தான்.

அதிலும் ஹீரோயின் லாஸ்லியா உடனான காதல் காட்சிகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அண்ணன், தங்கை போன்று பாசமாக பழகி வந்த இவர்களை ரசிகர்களும் அந்தக் கோணத்தில் தான் பார்த்து வருகின்றனர்.

அதனால்தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியானதுமே பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர். தற்போது இவர்களின் ஜோடியை திரையில் பார்த்த ரசிகர்களுக்கு பயங்கர எரிச்சலாக இருக்கிறது.

அவர்களின் நெருக்கமான காட்சிகளை பார்க்கும்போது தர்ஷன், லாஸ்லியா இருவருமே மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டு தான் நடித்து இருப்பது போல் தெரிகிறது. அந்தக் காட்சிகளில் கெமிஸ்ட்ரி எதுவும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

இதன் பிறகு இவர்கள் இருவரும் அண்ணன், தங்கையாக வேண்டுமானால் நடிக்கலாம். ஆனால் ஜோடியாக நடிப்பது எடுபடாது என்பதுதான் பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னணி ஹீரோயினாக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவுக்குள் வந்து இருக்கும் லாஸ்லியா இதில் இன்னும் நிறைய தூரம் போகவேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் அவர் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் தற்போது இந்த பிக்பாஸ் ஜோடியால்தான் பின்னடைவை சந்தித்து வருவதாக தெரிகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News