செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

Ethirneechal: குணசேகரனுக்கு மகள் ரூபத்தில் வந்த எமன்.. ஈஸ்வரிக்கு மறுமணம் பற்றி யோசிக்கும் தர்ஷினி 

குணசேகரனால் மொத்த குடும்பமும் அவமானப்பட்டு வருகிறது. தாரா பாப்பாவிற்கு காதுகுத்து மற்றும் மொய் விருந்து என பத்திரிகை அடித்து கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த பத்திரிகையில் குணசேகரன் பெயர் போடாததால் பத்திரிக்கை பெற்ற அனைவரும் அவருக்கு போன் செய்கின்றனர்.

 என் பெயரும் போடவில்லை, என் அப்பா பெயரும் போடவில்லை, இது என் வீட்டு பங்க்ஷன் இல்லை என மொத்த பேரையும் அவமானப்படுத்தும் படி பேசி வருகிறார் குணசேகரன். அது மட்டுமின்றி எனக்கு தர்ஷன் மட்டும் தான் ஒரே வாரிசு அவன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கிறேன் அதுக்கு வந்தா போதும் என்று தடை கற்கள் போட்டு வருகிறார்.

ஈஸ்வரிக்கு மறுமணம் பற்றி யோசிக்கும் தர்ஷினி 

 இதனிடையே தர்ஷினி வீட்டுக்கு வந்து, அம்மா மற்றும் சித்திகளுடன் நேரம் செலவிடுகிறார். பழைய  தர்ஷினி மாதிரி இல்லாமல் முதிர்ச்சி அடைந்த ஒரு பெண் போல் பேசி வருகிறார். மொத்த குடும்பமும் அவரால் சந்தோஷப்படுகிறது. எனக்கு 18 வயது முடிந்து விட்டது என் விஷயத்தில் தலையிடாதே என தர்ஷனை வாய் அடக்க செய்கிறார்.

 ஈஸ்வரியிடம் சென்று தர்ஷினி இப்போது போல் எப்போதும் இருக்காது. எனக்கு பின் உனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் உனக்கு ஜீவானந்தம் அப்பாவை பிடிக்குமா என்றும் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி நான் கல்யாணம் முடிந்த பெண் உனக்காகத்தான் வாழ்கிறேன் என முட்டுக்கட்டை போடுகிறார்.

தர்ஷினி மனதில் ஈஸ்வரிக்கு, ஜீவானந்தம் மட்டுமே நல்ல ஒரு நண்பராக கடைசி வரை இருக்க முடியும், அம்மாவுக்கும் அது பாதுகாப்பாக இருக்கும் என தோன்றுகிறது. இதனால் அவர் அடுத்த கட்டத்திற்கு ஈஸ்வரியை கொண்டு செல்ல முற்படுகிறார்.

Trending News