சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பா மீது செம கடுப்பான தனுஷ்.. அப்படி என்ன பண்ணிட்டாரு!

நடிகர் தனுஷ் சமீபத்தில் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டு ஐதராபாத்தில் தனிமையில் வசித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நேரத்தில் தன்னுடைய தந்தை மீது தனுஷ் பயங்கர கோபப்பட்டு பேசியதை தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தனுஷ் ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்து தற்போது தன்னை ஒரு சிறந்த நடிகராக தானே செதுக்கிக் கொண்டு உள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. தனுஷின் சினிமா கேரியரில் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் அண்ணன் செல்வராகவனுக்கும் ஏகப்பட்ட பங்குகள் உள்ளது.

செல்வராகவன் இயக்கிய ஆரம்ப கால படங்களில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வந்தார். இப்போதுகூட நானே வருவேன் என்ற படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இல்லற வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த நேரத்தில் தனது ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவுக்கு வந்தபோது சினிமாவில் ஆர்வமே இல்லாமல் இருந்ததாகவும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா தான் தனுஷ் கட்டாயப்படுத்தி சினிமாவிற்குள் தள்ளி விட்டதாகவும் அவரை சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கஸ்தூரிராஜா தனுஷ் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் சினிமாவில் சேர்த்தது அவருக்குப் பிடிக்காமல் ஒருமுறை வீட்டில் பயங்கர சண்டை போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு தந்தை மீது கடும் கோபத்தில் இருந்த தனுஷ் தற்போது சினிமாவில் ஹாலிவுட் வரையில் வெற்றிக் கொடி நாட்டி இருப்பதை நினைத்து தந்தையிடம் அன்று அப்படி பேசியது ரொம்ப தவறு என இப்போது வருந்தி வருகிறாராம். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, வாத்தி என அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் அவரது கைவசம் இருக்கின்றன. சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் அடுத்து ஏதேனும் முக்கியமான முடிவை தனுஷ் எடுப்பாரா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Trending News