புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முடிவுக்கு வந்த தோனியின் சிஎஸ்கே பயணம்.. ஐபிஎல்-க்கு ஒரு நாளுக்கு முன் வந்த அதிர்ச்சி தகவல்

Chennai Super Kings: விடிஞ்சா ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கிறது. அதுவும் முதல் போட்டியே சி எஸ் கே vs ஆர்சிபி. சென்னை ரசிகர்களுக்கு கண்ணுல ரெண்டு நாளா தூக்கம் இல்ல. சரியா ஒரு வருஷம் கழிச்சு தோனிய மஞ்சள் ஜெர்சியில் பார்ப்பதற்கு அவ்வளவு ஏக்கம்.

தோனி தலைமையில் சிஎஸ்கே அணி பீல்டுக்குள் நடந்து வரும். தோனி டாஸ் போட்டு பேட்டிங்கா, பீல்டிங்கா என முடிவு செய்யணும். இப்படியே, எப்போ டா மார்ச் 22 வரும், ஐபிஎல் ஆரம்பிக்கும் நாளும் பொழுது வேகமா போய்க்கிட்டே இருந்துச்சு.

ஆனா போட்ட நாளைக்கு ஆரம்பிக்கும் நிலையில், எதுக்குடா விடியதுன்னு தலை மேல கைய வச்சிட்டு உட்கார்ந்திட்டாங்க சென்னை ரசிகர்கள். இதற்கு காரணம் நம்ம தல தோனி தான்னு சொன்னா நம்ப முடியுதா.

ஐபிஎல் போட்டி ஆரம்பிக்க இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கிறது. அதற்குள் சென்னை ரசிகர்களின் மொத்த கனவையும் கலைத்துவிட்டார் நம்ம கேப்டன் கூல். தலைமேல் இடி இறக்குவது போல் அந்த அதிர்ச்சி தகவலும் வந்துவிட்டது.

முடிவுக்கு வந்த தோனியின் சிஎஸ்கே பயணம்

இன்று மாலை வழக்கம் போல சிஎஸ்கே அணியின் போட்டோ சூட் நடைபெற்றது. அதில் கேப்டன் இடத்தில் நம்ம தல தோனி இல்ல. சரி அந்த இடத்துல இருக்கிறது யாரு ஜடேஜா வான்னு ஒரு கேள்வி வரும். அதுவும் இல்ல, சிஎஸ்கே கேப்டனா ஆகி இருப்பது ருதுராஜ்.

சென்னை அணியின் இளம் வீரர். ஓபனிங் பேட்டிங்கில் எதிரில் இருக்கும் அணியை கலங்க விடக்கூடிய திறமைசாலி. இருந்தாலும் சிஎஸ்கே அணிக்கு எப்படி இவர கேப்டனா போட முடியும் எல்லோருக்கும் தோணும். ஆனா இந்த முடிவை எடுத்தது நம்ம கேப்டன் கூல் தான்.

தோனி இந்த ஐபிஎல் சீசனில் விளையாடுகிறார். ஆனால் ருதுராஜ் தலைமையின் கீழ். கேட்கவே கொஞ்சம் பாரமாக தான் இருக்கிறது. ஆனால் நம்ம தல எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என மனச தேத்திக்கொண்டு நாளைக்கு 8 மணிக்கு ஐபிஎல் பார்க்கலாம்.

Trending News