இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகி காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் வரவேற்பைத் தொடர்ந்து,நேற்று இரண்டாவது நாள் கொண்டாட்டங்களும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.இதில் திரையுலகம்,கிரிக்கெட் மற்றும் அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இரண்டாவது நாள் வரவேற்பின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி மற்றும் நடிகர் அஜித்குமார் ஆகியோரின் வருகைதான்.குறிப்பாக தோனி மற்றும் ரஜினிகாந்த் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களும்,ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் அன்புடன் சந்தித்துக் கட்டித்தழுவிய காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.அஜித்,மணமகன் அனிருத்தைக் கட்டியணைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்,நெல்சன் திலீப்குமார்,சிம்பு ,பிரதீப் ரங்கநாதன்,அஸ்வத் மாரிமுத்து,பூஜா ஹெக்டே உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.மேலும் கிரிக்கெட் உலகைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பிரபலங்களின் வருகையும் கவனம் பெற்றது.நயன்தாரா,விக்னேஷ் சிவன்,ராஷ்மிகா மந்தனா,விஜய் தேவரகொண்டா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
வெள்ளை நிற அழகிய கவுனில் காவியா மாறனும்,வெள்ளை நிற பிளேசரில் அனிருத்தும் மணமக்களாக ஜொலித்தனர்.ஏற்கனவே முதல் நாள் வரவேற்பில் விஜய்,மு.க.ஸ்டாலின்,எடப்பாடி பழனிச்சாமி ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில்,இரண்டாவது நாள் நிகழ்ச்சியும் நட்சத்திரங்களின் சங்கமமாக அமைந்தது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.




