வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு பட வாய்ப்பிற்காக போராடும் துருவ் விக்ரம்.. கால் கடுக்க நின்று அப்பாவைப் போல அவஸ்தைப்படும் மகன்

வாரிசு நடிகர் என்று வந்து விட்டாலே ஒரு தரமான வெற்றியை கொடுக்க போராட வேண்டும் என்பதுதான் தமிழ் சினிமாவின் விதியாக இருக்கிறது. அதற்கேற்றார் போல் பல வாரிசு நடிகர்களும் ஒரு வெற்றிக்காக கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் விக்ரம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அவருடைய மகனுக்கு இன்னும் ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை.

அந்த வகையில் துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் மாரி செல்வராஜின் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அது இப்போது வரை கைகூடாமல் இருக்கிறது. மேலும் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தாலும் விக்ரம் தன் மகனுக்காக ஒவ்வொரு கதையையும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்.

Also read: ஒரு கட்டத்தில் விக்ரமை தூக்கி விட்ட அஜித்.. இந்தப் படத்துக்கு பிறகு தான் கேரியர் டாப்ல வந்துச்சு

ஏனென்றால் துருவ் விக்ரமின் சினிமா வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே அவருடைய எண்ணம். அதனால் தான் மாரி செல்வராஜ் கதையை கேட்டு அதை ஓகே செய்தார். ஆனால் அவர் உதயநிதியின் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் பிஸியாகி விட்டதால் இந்த படத்தை எப்போது தொடங்குவார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இந்த படத்தை ரொம்பவும் எதிர்பார்த்த விக்ரம் தற்போது அது குறித்து பா ரஞ்சித்திடம் பேசி இருக்கிறார். ஏனென்றால் அவர்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர். தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வரும் விக்ரம் ரஞ்சித்திடம் எதற்காக இத்தனை வருடம் காக்க வைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பலனாக தற்போது அந்த படம் வரும் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also read: பா.ரஞ்சித், கௌதம் மேனன் கொடுத்த பூஸ்ட்.. தோல்வி படங்களை மறந்து சம்பளத்தை உயர்த்திய விக்ரம்!

இதனால் தற்போது உற்சாகத்தில் இருக்கும் துருவ் விக்ரம் தினமும் மணி கணக்கில் கால் கடுக்க வெயிலில் நிற்கிறாராம். ஏனென்றால் இந்த படத்திற்காக அவர் தன்னுடைய நிறத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் முதல் கண்டிஷன். அதற்காகவே அவர் தன் அப்பாவை போல் கடின உழைப்பிற்கு தயாராகி விட்டார்.

அந்த வகையில் தக்காளி பழம் போல் இருக்கும் துருவ் விக்ரம் தற்போது வெயிலில் நின்று தன் நிறத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதுவே அவர் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. மேலும் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற ரேஞ்சில் அவர் தரமான ஒரு வெற்றிக்காக களத்தில் குதித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: தூசி தட்டி ரிலீசுக்கு ரெடி செய்யப்படும் விக்ரமின் படம்.. லேட்டா வந்தாலும் ஒடிடியில் நல்ல விலைக்கு போன வியாபாரம்

Trending News