செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

துருவ் விக்ரமை வாட்டி வதைக்கும் மாரி செல்வராஜ்.. அந்த விளையாட்டு மூலம் அப்பா இடத்தை பிடிக்கும் மகன்

எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தன்னுடைய திறமையால் மட்டுமே தற்போது வரை நிலைத்து நிற்பவர் சியான் விக்ரம். தந்தை பெரிய நடிகர் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தார் அவரது மகன் துருவ் விக்ரம். மேலும் விக்ரமின் மகன் என்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகப்படியாக தான் இருந்தது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என எதிர்பார்த்த நிலையில் மக்களை ஏமாற்றி விட்டார் துருவ் விக்ரம். ஒரு தரமான ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் தற்போது வரை திண்டாடி வருகிறார். தன்னைவிட ஒரு படி மேலே வைத்து அழகு பார்க்க நினைத்த சியான் விக்ரமுக்கு இது ஏமாற்றத்தை தந்தது.

Also Read : அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

சிற்பி செதுக்கினால் தான் சிலையாகும் என்பதற்கு இணங்க தனது மகனை மாரி செல்வராஜை நம்பி ஒப்படைத்து விட்டார் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வாட்டி வதைத்து வருகிறார். இந்த படத்திற்காக சில வருடங்கள் ஆகவே அவர் பயிற்சி எடுத்து வருகிறார். மேலும் தனது நிறத்தையும் கருப்பாக துருவ் விக்ரம் மாற்றிக் கொண்டு உள்ளாராம்.

கபடி விளையாட்டை மையமாக வைத்து தான் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். அதுவும் இது ஒரு உண்மை கதையைக் கொண்டுதான் படமாக எடுக்கப்பட உள்ளாராம். இதனால் தமிழ்நாட்டில் மனத்தி என்ற ஊரில் கணேசன் என்பவர் தான் சிறந்த கபடி பிளேயராக இருந்து வருகிறார்.

Also Read : எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

ஆகையால் அவரிடம் பயிற்சி எடுக்க ஒரு மாத காலம் துருவ் விக்ரமை மாரி செல்வராஜ் அனுப்பி வைத்துள்ளார். இதனால் சித்திரை வெயிலில் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இந்த மாதம் எப்படியும் படப்பிடிப்பு தொடங்கும், இரண்டு மூன்று மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வேறு படத்திற்கு செல்லலாம் என்று துருவ் விக்ரம் எண்ணியிருந்தார்.

ஆனால் இந்த பயிற்சியினால் படப்பிடிப்பு தொடங்கவே இன்னும் ஒரு மாத காலம் இழுக்கும் போல. மாரி செல்வராஜை பொறுத்தவரையில் நல்ல படத்தை மக்களுக்கு கொடுக்க கூடியவர். அதனால் எப்படியும் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் மூலம் தனது அப்பாவின் இடத்தை துருவ் விக்ரம் பிடிப்பார்.

Also Read : வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

Trending News