செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

6 வருஷமாக தவம் இருந்த பிரசாந்துக்கு அந்தகன் படம் கை கொடுத்ததா.? முதல் நாள் வசூல் விவரம்

Prashanth in Andhagan: தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மற்றும் அஜித், அப்போது 90களில் ஒரு படி பிரசாந்துக்கு பின்னாடி தான் இருந்தார்கள். அந்த அளவிற்கு ஃபேவரிட் ஆக்டர் ஆக ஜொலித்து வந்தார் நடிகர் பிரசாந்த். இவருடைய நடிப்பு, ஸ்டைல், தேர்ந்தெடுத்து நடித்த கதைகள் அனைத்தும் இளைஞர்கள் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக டாப் ஸ்டார் ஆக ஜொலித்தார்.

ஆனால் போகப் போக அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி போய் நின்றார். இடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிக்கலில் சிக்கி தவித்த இவரால் தொடர்ந்து படத்தில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறிப் போனார். இதனால் வாய்ப்பை இழந்து சினிமாவை விட்டு கொஞ்ச வருஷமாக ஒதுங்கி இருந்தார். அதன் பின் மறுபடியும் கம்பேக் கொடுக்கும் விதமாக அந்தகன் படத்தில் நடித்தார்.

6 வருஷமாக போராடிய பிரசாந்துக்கு கிடைத்த வெற்றி

இப்படத்தை இவருடைய அப்பா தியாகராஜன் இயக்கி தயாரிக்கவும் செய்திருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஹிந்தியில் வெளிவந்த அந்தாதூன் படத்தின் ரீமேக். அப்படிப்பட்ட படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டு அதை திரையில் வெளியிட முடியாமல் போராடி வந்தார். தற்போது பல போராட்டங்களுக்குப் பிறகு நேற்று தான் அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது.

அப்படி ஆறு வருடமாக தவம் இருந்து வெற்றியை பார்ப்பதற்கு போராடி வந்த பிரசாந்துக்கு அந்தகன் படம் கைகொடுத்துதா என்பதை தற்போது பார்க்கலாம். இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சிம்ரன் அவருடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார். அந்த வகையில் பல வருடங்களுக்குப் பின் சிம்ரன் மற்றும் பிரசாந்தின் கெமிஸ்ட்ரி பார்க்கும் விதமாக திரையில் பார்த்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.

பார்வையற்றவராக நடித்து வரும் பிரசாந்துக்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன, சிம்ரன் அவருடைய கணவராக இருக்கும் கார்த்திக்கை கொலை செய்தார் என்ற காரணங்களை நோக்கி இப்படத்தின் கதை நகருகிறது. மேலும் யோகி பாபு, ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், வனிதா, சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவலின் படி ஒரே நாளில் 70 லட்ச ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அத்துடன் தமிழக திரையரங்குகளில் நேற்று ஈவினிங் மற்றும் நைட் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல்லாக இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் வசூலில் இன்னும் அதிகமான முன்னேற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு இடையில் வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய்யுடன் இணைந்து நடித்த GOAT படத்திலும் பிரசாந்துக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் விதமாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று, விட்ட இடத்தை நெருங்கும் வகையில் பிரசாந்த் வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement Amazon Prime Banner

Trending News