அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் கனெக்ட் திரைப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மாயா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் நடுநடுங்க வைத்த இந்த கூட்டணி தற்போது இங்கிலீஷ் பட சாயலில் இந்த படத்தை பயங்கர திரில்லராக கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்த பலரும் பாராட்டிய நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய விமர்சனங்களை ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியீட்டு வருகின்றனர். அந்த வகையில் இத்திரைப்படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் என இரண்டும் கலந்து வந்து கொண்டிருக்கிறது.

Also read: இதனால தான் ஆடியோ பங்ஷனுக்கு போறதில்ல.. 20 வருட அனுபவத்தை கூறிய லேடி சூப்பர் ஸ்டார்
அதில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல நயன்தாராவின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகவும் அவரின் மகளாக நடித்திருக்கும் அந்த சின்ன பெண்ணின் நடிப்பும் வியப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 99 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சஸ்பென்ஸ் உடன் இருந்ததாக கூறுகின்றனர்.

மேலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் இருட்டு, பயமுறுத்தும் சவுண்ட் என இப்படம் ஹாலிவுட் பேய் படம் போன்று இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நயன்தாரா ரொம்பவும் வயதான தோற்றத்தில் இருப்பதாக பலரும் கலாய்த்து வந்தனர். இது குறித்து பல ட்ரோல்களும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Also read: சொந்த படம் என்றதும் தீயாய் வேலை செய்யும் நயன்தாரா.. ரிலீசுக்கு முன்பே 3 மடங்கு லாபம் பார்த்த கனெக்ட்
ஆனால் உண்மையில் நயன்தாராவின் தோற்றம் இந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி இருப்பதாகவும் ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக எப்படி இருக்க வேண்டுமோ அவர் அந்த அளவுக்கு கச்சிதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நயன்தாரா மொத்த படத்தையும் தன்னுடைய நடிப்பின் மூலம் தாங்கிப் பிடித்துள்ளார்.

அதேபோன்று அனுபம் கெர், சத்யராஜ் போன்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு சிலர் படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்தாலும் சிலர் இந்த படத்துடன் கனெக்ட் ஆக முடியவில்லை என்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம் நயன்தாராவின் இந்த கனெக்ட், மாயா திரைப்படம் அளவுக்கு ரசிகர்களை பயமுறுத்த தவறி இருக்கிறது.

Also read: திடீரென ட்ரெண்ட் ஆன அண்ணாமலையின் வாட்ச் விலை.. கோடிகளில் வாட்ச் வாங்கிய 6 இந்திய செலிபிரிட்டிகள்