சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சித்தார்த் இந்த நடிகையை இரண்டாவது திருமணம் பண்ணிட்டாரா? இன்று கிளம்பிய பெரும் சர்ச்சை டாப்பிக்

Actor Siddharth : சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த சித்தார்த் ரகசியமாக திருமணத்தை முடித்திருக்கிறார். பாய்ஸ் படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்து. அதன் பிறகு தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் அவருடைய நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சித்தார்த் பாடகராகவும் நல்ல திறமை கொண்டவர். இந்நிலையில் ரகசியமாக சித்தார்த்துக்கு திருமணம் முடிந்திருக்கிறது.

சித்தார்த் கடந்த 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் நடிகை அதிதி ராவுடன் சித்தார்த் நெருங்கி பழகி வந்தார்.

அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்

2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மகாசமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் ஒன்றாக பணியாற்றியிருந்தனர். இதிலிருந்து இருவரும் காதலிக்க தொடங்கி இருந்தனர். பல்வேறு பட விழாக்களில் இருவரும் ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் இன்று 27 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக பிரபல பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் சித்தார்த்தின் கல்யாண செய்தி பெரும் சர்ச்சையான டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இவர்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் சொன்னால் தான் உண்மை தெரியவரும். மேலும் இவர்களது திருமண செய்தி அறிந்த ரசிகர்கள் இப்போது வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அதோடு திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து உள்ள புகைப்படத்தை பார்க்கவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Trending News