செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நாக்க தொங்க போட்டுட்டு வந்துட்டியா கோபி .. அவார்டு பங்ஷனில் அசிங்கப்பட்ட சக்களத்தி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து செய்த பிறகு உடனே புது மாப்பிள்ளையான கோபி, தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு ஹனிமூன் வந்திருக்கிறார்.

அங்குதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும், பாக்கியலட்சுமி குடும்பமும் வந்திருக்கிறது. இந்நிலையில் கோபி-ராதிகா இருவரையும் சந்திக்கும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் தங்களுடைய எதிர்ப்பை காட்டுகின்றனர்.

Also Read: பாக்யா முன் அவமானப்பட்ட ராதிகா.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

முன்பு கோபி குற்ற உணர்ச்சியில் பாக்யாவை அசிங்கப்படுத்தி திட்டியது போல, தற்போது பாக்யாவின் சக்காளத்தி ராதிகாவும் அவரை திட்டுகிறார். அதைப் பொறுத்துக் கொள்ளாத பாக்யா, ‘நான் தூக்கி எறிந்த பொருளை தான் நீ எடுத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்’ என பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் அடித்து ராதிகாவின் வாயை அடைகிறார்.

இதன்பிறகு கோபி அவார்ட் வாங்குவதற்காக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு கொடைக்கானலுக்கு வந்தது தவறு என்று தன்னைத்தானே திட்டிக் கொள்கிறார். ஆகையால் அவார்ட் பங்க்ஷன் முடிந்த பிறகு உடனே ஊருக்கு கிளம்பி விடுவோம் என்ற முடிவில் கோபி மற்றும் ராதிகா இருக்கின்றனர்.

Also Read: சிக்கவைத்து களி தின்ன வைக்கும் வெண்பாவின் அம்மா.. ஆடி போன மாப்பிள்ளை

இந்த அவார்ட் பங்க்ஷனை நடத்தும் கோபியின் நண்பருக்கு  கோபி-பாக்யா இருவருக்கும் விவாகரத்து ஆன விஷயம் தெரியாததால், கோபியின் முன்னேற்றத்திற்கு முழுக்காரணம் பாக்யாதான் என மேடையில் அவரை அழைத்து மரியாதை செய்கிறார்.

அந்த சமயம் ராதிகாவிற்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. என்னதான் விவாகரத்து ஆனாலும் மனைவி என்கின்ற அந்தஸ்து பாக்யாவிற்குதான் கிடைக்கிறது என்று கோபியின் மீதும் ராதிகா வெறுப்பு காட்டுகிறார். பிறகு ராதிகாவை சமாதானப்படுத்தி ஒரு வழியாக ஊருக்கு அழைத்துச் செல்கிறார் கோபி.

Also Read: சித்ரா வழக்கில் சிக்கும் விஜய் டிவியின் லவர் பாய்.. பலரின் முகத்திரையை கிழிப்பேன் என ஹேமநாத் அதிரடி

Trending News