புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எனக்கு மகாலட்சுமிக்கும் 21 வயசு வித்தியாசமா.? கல்யாணத்திற்கு பின் ரவீந்தர் அளித்த பேட்டி

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அதிகமாக மகாலட்சுமி, ரவீந்தர் திருமணச் செய்தி தான் பேசப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத விதமாக காதும் காதும் வைத்தபடி திருப்பதியில் மகாலட்சுமியை திருமணம் முடித்துள்ளார் ரவீந்தர். மேலும் திருமண புகைப்படத்தை ரவீந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர்களுக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் பல விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. ஒருபுறம் மகாலட்சுமி பணத்தாசையால் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கணவரைப் பிரிந்து ஒரு மகனுடன் இருக்கும் மகாலட்சுமி சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.

Also Read : நயன்தாரா ரேஞ்சுக்கு அலப்பறை.. மஞ்சள் தாலியுடன் ஹனிமூன் போட்டோவை வெளியிட்ட மகாலட்சுமி

இந்நிலையில் ஒரு தயாரிப்பாளரை மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதற்கு பணம்தான் காரணமாக இருக்கும் என விமர்சித்து வருகிறார்கள். மறுபுறம் முன்னணி தயாரிப்பாளர் ரவிந்தருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன செய்தி பலருக்கும் தெரியாத ஒன்று.

ஒரு சின்ன பொண்ணை அதிக வயதுடைய ரவீந்தர் திருமணம் செய்து கொண்டதாக அவர் மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது திருமணத்திற்கு பிறகு பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் ரவீந்தர், மகாலட்சுமி இது குறித்து பேசி உள்ளனர்.

Also Read : புளியங்கொம்பை பிடித்த சீரியல் நடிகை மகாலட்சுமி.. முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்

அதாவது ரவீந்தர், நான் என்ன ஸ்கூல் படிக்கிற பொண்ணயா தூக்கிட்டு வந்தேன், நான் ஸ்கூல் படிக்கும்போதே எனக்கு இவங்க மேல கிரஷ். முதல்ல எனக்கு என்னமோ 55, 34 வயசுன்னு தப்பு தப்பா எழுதுறாங்க. எனக்கு இப்போ 38 வயசு தான் ஆகுது. அதைவிட முக்கியம் மகாலட்சுமிக்கு இப்ப 35 வயசு.

என்னமோ சின்ன பொண்ண தெரியாத்தனமா தூக்கிட்டு வந்த மாதிரி கண்டபடி எழுதுறாங்க என அந்த பேட்டியில் கிண்டலாக பேசியிருந்தார் ரவீந்தர். தற்போது இவர்கள் கொடுக்கும் பேட்டி இணையத்தில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட வருகிறது. மேலும் விரைவில் பிக் பாஸ் தொடங்க உள்ளதால் ரவீந்தரின் விமர்சனத்திற்காக பிக் பாஸ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read : தயாரிப்பாளரை 2ம் திருமணம் செய்த சன் டிவி மகாலட்சுமி.. திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Trending News