புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அப்ப ஹனிமூன் போகலையா.. வைரலாகும் ரவீந்தர் பதிவு

ரவீந்தர், மகாலட்சுமி ஜோடி கடந்த சில தினங்களாக இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளனர். யாரும் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு ஒரு புறம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் அதிகமாக கடுமையான விமர்சனங்கள் தான் எழுந்து வருகிறது.

காரணம் ரவீந்தர் ஒரு தயாரிப்பாளர் என்பதற்காக மகாலட்சுமி இவரை திருமணம் செய்து கொண்டதாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் ரவீந்தர் பலரது வாழ்க்கையை விமர்சித்துள்ளார். இதனால் இப்போது அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளதால் அவரை பலர் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Also Read :நயன்தாரா ஸ்டைலில் தனிவிமானம், தனி தீவு.. தேனிலவுக்கு புறப்பட்ட மகாலட்சுமி-ரவீந்தர்

இந்நிலையில் பல ஊடகங்களுக்கு இவர்கள் ஜோடியாக பேட்டி கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரவீந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தனி விமானம் மூலம் ஹனிமூன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் ரவீந்தர், மகாலட்சுமி இருவரும் ரவீந்தரின் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Also Read :மகாலட்சுமி ஜோடியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரபலம்.. எல்லாரு மனசுலயும் இதான் இருந்துச்சு

அதில், என்னுடைய குலம் செழிக்க வந்தவள் நீ, இனி துவங்கலாம் குலதெய்வத்தின் அருளோடு, நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி, நம்மை வெறுக்கும் உலகத்திற்கு மிக்க நன்றி, ஒருநாள் நாங்கள் உங்களை நேசிக்க வைப்போம், என்றும் உங்கள் ரவி, மிஸஸ் ரவி என ரவீந்தர் பதிவிட்டுள்ளார்.

Ravinder-Mahalakshmi

அதாவது நம்மை வெறுப்பவர்களையும் நேசிக்க வைத்துவிடுவோம் போன்ற இந்த பதிவை ரவீந்தர் போட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு தான் தனி விமானத்தில் செல்கிறார்கள் என்று நினைத்த நிலையில் குலதெய்வ வழிபாட்டுக்கு தான் சென்றுள்ளனர்.

Also Read :மகாலட்சுமி, ரவீந்தரை தொடர்ந்த அடுத்த திருமண ஜோடி.. சஸ்பென்ஸ் ஆக திருமணத்தை முடித்த ராஜா ராணி 2 பிரபலம்

Trending News