சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அவர்களுக்கே உரிய தனி பாணியில் வெற்றி கண்ட 7 இயக்குனர்கள்.. அதுல ஒருத்தர் மட்டும் ஆபாச படங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ளவர்கள் தனக்கே உண்டான ஒரு பாணியை தேர்ந்தெடுத்து அதன் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகின்றனர். அவ்வாறு தனி பாணியில் படங்களை இயக்கி வெற்றி பெறும் இயக்குனர்களை பார்க்கலாம்.

பாரதிராஜா : தமிழ்சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இதைத்தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கருத்தம்மா, முதல் மரியாதை போன்று கிராமத்து கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி முத்திரை பதித்தார்.

கேஎஸ் ரவிக்குமார் : கே எஸ் ரவிக்குமார் கமர்ஷியல் படங்களை எடுத்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறுவார். இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் வருவதை வழக்கமாக வைத்திருப்பார். இவர் இயக்கத்தில் வெளியான படையப்பா, முத்து, நாட்டாமை, பஞ்சதந்திரம் போன்ற படங்கள் எப்போது பார்த்தாலும் சலிப்பு தட்டாத படங்கள்.

சுந்தர் சி : முறைமாமன் என்ற நகைச்சுவை படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இவருடைய இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். வின்னர், கிரி, ரெண்டு, கலகலப்பு, அரண்மனை என நகைச்சுவை கலந்த படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார்.

ஹரி : ஆறு, சாமி, சிங்கம் என அதிரடி கலந்த கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் ஹரி. இவருடைய படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. தற்போது அருண் விஜய் நடிப்பில் யானை படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

ஷங்கர் : ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும். அதே நேரத்தில் பிரமாண்டமாக எடுக்கப்படும் அந்தப் படங்கள் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும். ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், 2.0 என இவர் பல பிரமாண்ட படங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் : கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் புதுமையான காதலை வெளிப்படுத்தும். இதுவரை யாரும் இவ்வளவு அழகாக காதலை சொல்ல முடியாத அளவிற்கு இவருடைய படங்கள் இருக்கும். மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என காதல் படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் கௌதம் மேனன்.

சந்தோஷ் பி ஜெயக்குமார் : ஹர ஹர மஹாதேவ், இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவருடைய படங்களில் அதிக கவர்ச்சி மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இடம்பெற்றதால் சர்ச்சையில் சிக்கினாலும் படம் எதிர்பார்த்த வெற்றி பெறுகிறது.

Trending News