புதன்கிழமை, ஜனவரி 22, 2025

எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய தில் ராஜ்.. விஜய் கூட கட்டுப்படுத்தாத பரிதாபம்

தெலுங்கில் பிரபல இயக்குனரான தில் ராஜு அங்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்துள்ளார். இப்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

அதாவது சமீபத்தில் தில் ராஜுவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது எனக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சினை வருகிறது என தில் ராஜு மிக வருத்தத்துடன் பேசி இருந்தார். வாரிசு படத்தை பண்டிகை நாட்கள் தெலுங்கில் வெளியிடாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் ஒருவழியாக பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

Also Read : முன்னுக்குப் பின் முரணாக பேசும் விஷால்.. விஜய்யை பார்த்ததும் பச்சோந்தியாக மாறிய சம்பவம்

மேலும் அஜித்தை விட விஜய் தான் மாஸ் ஹீரோ அதனால் தமிழ்நாட்டில் வாரிசு படத்துக்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என உதயநிதி இடம் பேச உள்ளதாக தில் ராஜு அந்த பேட்டியில் கூறியிருந்தார். இவ்வாறு தேவை இல்லாத விஷயத்தை பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதாவது ஏற்கனவே இந்த சர்ச்சை நீண்ட நாட்கள் ஆக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களில் யார் நம்பர் ஒன் நடிகர் என்ற போட்டி இருக்கிறது. இப்போது போய் இவர் இப்படி பேசி உள்ளது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் பத்தி எரிகிறது.

Also Read : மாஃப்பியா கும்பலின் பிடியில் தெரிஞ்சே சிக்கிய விஜய்.. என்ன நடக்கப் போகிறது என்ற பயத்தில் எஸ்.ஏ.சி.!

ஆனால் தற்போது வரை விஜய் இதைப்பற்றி எந்த ஒரு விஷயமும் சொல்லாமல் உள்ளார். இந்த விஷயம் இவ்ளோ பெரிய பூதாகரமாக வெடித்த பின்பும் விஜய் மௌனம் காத்து வருவது ஏன் என்று பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் வாரிசு படம் முடிந்தவுடன் அந்த படக்குழுவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தான் விஜய் நடந்து கொள்கிறார்.

அதனால் தான் தில் ராஜு பேச்சுக்கு எதிராகவும் அவரால் எதுவும் சொல்ல முடியாமல் உள்ளார். மேலும் வாரிசு படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் விஜய் வாரிசுப் படத்துக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு தளபதி 67 படத்தை தான் தற்போது நம்பி உள்ளார்.

Also Read : எப்படி பார்த்தாலும் வாரிசை அடக்க பார்க்கும் துணிவு.. கவுண்டவுன் பார்த்து ஒன்னுமே பண்ண முடியல என வருந்தும் விஜய்

Trending News