செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தில் ராஜுவால் விஜய்க்கு வந்த பேராபத்து.. ஊம கோட்டானாக இருந்து ஸ்கோர் செய்த அஜித்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் படம் வாரிசு. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தில் ராஜுவின் முகம் தான் எங்கு பார்த்தாலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால் ஏதாவது ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். அதனால் அஜித்தின் துணிவை காட்டிலும் விஜயின் வாரிசு படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும்.

Also Read : திரிஷாவுக்கு பயத்தை காட்டிய நயன்தாரா.. விஜய்க்கு ஜோடி போட தீயாக வேலை செய்யும் குந்தவை

இது குறித்து உதயநிதியிடம் பேச போவதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இவ்வாறு தில் ராஜு பேசியது அஜித்தை மட்டம் தட்டுவதாக உள்ளது. மேலும் தில் ராஜு பேசியதற்கு விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அஜித்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊம கோட்டானாக சும்மாவே இருந்து அஜித் தற்போது ஸ்கோர் செய்துள்ளார். மேலும் துணிவு படத்திற்கு தான் தற்போது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு தில்ராஜு மிகவும் நாகரிகமற்ற எண்ணங்கள் கொண்டவர் என்றும், பொது வழியில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை என்று அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : வளர்த்து விட்டவர்களை மதிக்காத விஜய்.. தலையாட்டி பொம்மையாக ஆட்டிப்படைக்கும் முதலாளி!

தில் ராஜுவை வாரிசு படத்திற்கு ப்ரமோஷன் செய்ய சொன்னால் தேவையில்லாமல் வம்பை விலக்கி வாங்கி துணிவு படத்திற்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளார். ஆகையால் இதன் காரணமாக வாரிசு படம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என சினிமா விமர்சகர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்களின் ரிலீஸ்க்கு இன்னும் ஒரு மாத அவகாசம் கூட இல்லை. ஆகையால் இப்போதே படத்திற்கான போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கூடிய விரைவில் இந்த இரு படங்களின் ட்ரெய்லரும் வெளியாக உள்ளது.

Also Read : அஜித், விஜய்யுடன் பொங்கலுக்கு மோத தயாராகும் கமல்.. ரஜினிக்கு போட்டியாக விறுவிறுப்பாக தொடங்கிய படத்தின் வேலை.!

Trending News