ஒரே திரையில் பட்டையைக் கிளப்ப வரும் டில்லி, ரோலக்ஸ்.. லோகேஷ் செய்ய காத்திருக்கும் சம்பவம்!

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது வரை 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கார்த்தி பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தில் கைதி படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தது. ஆனால் கார்த்தியின் டில்லி கதாபாத்திரத்தின் குரல் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது.

Also Read : கார்த்தியை ஹீரோவாக்க தயங்கிய மணிரத்னம்.. 18 வருடத்திற்கு முன்பே கைநழுவி போன வாய்ப்பு

இதுபற்றி கார்த்தி கூறுகையில், விக்ரம் படத்தில் நடிக்க லோகேஷ் தனக்கு அழைப்பு விடுத்ததாக கூறியிருந்தார். ஆனால் அப்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக நீண்ட தலை முடி வளர்த்துக் கொண்டு இருந்ததாகவும், இதனால் டில்லி கதாபாத்திரத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

மேலும் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் போல தானும் டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடும் என கார்த்தி கூறியிருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்குப் பிறகு கைதி 2 படத்தை எடுக்க உள்ளார்.

Also Read : தியேட்டரை தாண்டி ஓடிடியிலும் சாதனை படைத்த விக்ரம்.. படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

கைதி 2 படத்தில் லோகேஷின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் கண்டிப்பாக இடம்பெறும். அதுமட்டுமல்லாமல் ரோலக்ஸ் கதாபாத்திரம் நிச்சயம் இருக்கும் என்று சஸ்பென்ஸை கார்த்தி உடைத்துள்ளார். இதனால் ஒரே திரையில் ரோலக்ஸ், டில்லி இருவரும் இடம் பெற உள்ளனர்.

ஆகையால் கைதி 2 படத்தில் தரமான சம்பவத்தை வைக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தியின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கைதி 2 படத்திற்கான அப்டேட்காக காத்து இருக்கின்றனர். மேலும் விக்ரம் படத்தில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடித்த சூர்யா இப்படத்தில் அதிக காட்சிகளில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரோலக்ஸ்-க்கு அடிமையான சூர்யாவின் தீவிர ரசிகன்.. மனுஷன் என்னமா ரசிச்சு இருக்கான்!