Vijay: பகைக்கு தீனி போடும் தில்ராஜ்.. விஜய் கழட்டி விட்டதால் பெரிய வீட்டுப் பிள்ளைக்கு விரித்த வலை

தில்ராஜ் தெலுங்கு தேசத்தில் கொடி கட்டி பறக்கும் தயாரிப்பாளர்.விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து அவர் ஊரில் பல பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டார். இவருக்கு சொந்தமாக நிறைய தியேட்டர்கள் இருக்கிறது.

தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தெலுங்கு தேசத்தில் பகையை சம்பாதித்து விட்டார். அங்கே பண்டிகை நாட்களில் அந்த ஊர் ஹீரோக்கள் படம் தான் ரிலீஸ் ஆக வேண்டும் மற்ற மொழி ஹீரோக்கள் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என பிரச்சனையை கிளப்பி வந்தனர்,

விஜய் கழட்டிவிட்டதால் பெரிய வீட்டுப் பிள்ளைக்கு விரித்த வலை

ஆனால் தில்ராஜ் தான் விஜய்யை வைத்து இயக்கிய வாரிசு படத்திற்கு முன்னுரிமை கொடுத்து வந்தார். இதுவே அங்கே பூதாகர பிரச்சினையாக வெடித்தது. தற்போது மீண்டும் தமிழ் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

விஜய், தளபதி 69 படத்திற்கு இவரை நாடி இருக்கிறார். இருவரும் ரகசியமாக சந்தித்துள்ளனர். அப்பொழுது விஜய் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நீங்கள் பேசியது தான் படத்திற்கு பெரிய உறுதுணையாக இருந்தது. உங்களை கிண்டல் செய்யும் விதமாக பண்ணிய விஷயங்கள் அனைத்தும் படத்திற்கு நல்ல ஒரு வியாபாரத்தை கொடுத்தது என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இப்பொழுது தில்ராஜ் மற்றும் ஒரு தமிழ் படத்தை தயாரிக்கவிருக்கிறார். பெரிய இடத்து மருமகன் தனுசை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு வருகிறார். அதற்கான பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்தது. கூடிய விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பும் வரும்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →