சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கும் தில்ராஜ்.. பலவீனத்தால் மரியாதையை கேள்விக்குறியாக்கிய ஷங்கர்

கேம் சேஞ்சர் படத்திற்காக சுமார் 450 கோடிகளை இறக்கி இருக்கிறார் வெங்கடேஷ் கிரியேஷன்ஸ் ஓனர் தில்ராஜ். இன்னமும் இந்த பட புரமோஷன் வேலைகள் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் 500 முதல் 550 கோடிகள்வரை இறுதியில் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைகளுக்காக சுமார் 210 பேர் அமெரிக்கா சென்று உள்ளனர். அத்தனைக்கும் காசை வாரி இரைக்கிறார் தில்ராஜ். ஏற்கனவே இந்த படத்திற்கு சங்கர் போட்ட பட்ஜெட் 700 கோடிகள். ஆனால் இதற்கு ஆரம்பித்திலேயே முட்டுக்கட்டை போட்டுள்ளது வெங்கடேஸ்வரா நிறுவனம்.

ஷங்கர் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் இந்தியன் 2. அந்த படமும் சுமா 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் நூறு கோடி கூட வசூலிக்காமல் அட்டர் பிளாப்பானது. இதனால் சங்கர் மீது இருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது. சங்கர் படமா இது என அனைவரும் சொல்லும் அளவிற்கு மொக்கை வாங்கியது.

இதனால் தில்ராஜ் கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இருக்கிறார். 700 கோடிகளில் ஆரம்பித்த பட்ஜெட் 400 கோடிகளில் வந்து நிற்கிறது. பல இடங்களில் சங்கருக்கு செக் வைத்துள்ளார்கள். அது மட்டும் இன்றி சங்கரை முழு நேரமாக இந்த பட ப்ரமோஷன் வேலைகளை செய்ய வேண்டும் என கட்டளை போட்டிருக்கிறார்.

இன்று மக்களின் ரசிப்பு தன்மை வேறு ஒரு கோணத்தில் போய்க்கொண்டிருக்கிறது ஆரம்பத்தில் பிரம்மாண்டத்தை சங்கர் படத்தின் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் இப்பொழுது எல்லா படங்களிலும் அசால்டாக காட்டுகிறார்கள். இதனால் தில்ராஜ் மற்றும் ஷங்கர் இருவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Trending News