புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பல கோடிகளை இழந்து தெரு கோடிக்கு வந்த தில்ராஜ்.. ஷங்கரால் கோவிந்தாவான விஜய் வீடு

450 கோடிகள் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது கேம் சேஞ்சர் படம். ஷங்கர் இயக்கிய இந்த படத்தை ஆந்திராவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் ஓனர் தில்ராஜ் தயாரித்துள்ளார்.படம் பட்ஜெட் போக ப்ரொமோஷனுக்கே கிட்டத்தட்ட நூறு கோடிகள் செலவழித்துள்ளார்.

கடந்த பத்தாம் தேதி அன்று இந்த படம் ரிலீஸ் ஆனது. ஒரு பக்கம் பாசிட்டிவ்வாகவும் மறுபக்கம் நெகட்டிவ்வாகவும் விமர்சனங்கள் கலவையாக வந்த வண்ணம் இருக்கிறது. போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியுமா என்று தெரியாமல் தில்ராஜ் திணறி வருகிறார்.

இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 200 பேர் அமெரிக்கா சென்று ப்ரோமோஷன் செய்தனர். இந்த படமும் வழக்கமான கமர்சியல் படமாக தான் இருக்கிறது. படத்தில் புதிதாய் ஒன்றும் இல்லை மாறாக இந்தியன், ஜென்டில்மேன் போன்ற ஷங்கரின் முந்தைய படங்களை பார்த்த ஞாபகம் மட்டுமே வருகிறது.

இதனால் படத்திற்காக செலவழித்த 500 கோடிகள் திரும்ப வருமா என்பது சந்தேகம்தான். இதே தயாரிப்பாளர் தில்ராஜ் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தையும் தயாரித்தார். அந்த படத்தில் விஜய்யின் வீடாக ஒரு பிரம்மாண்ட வீட்டை காட்டி இருப்பார்கள். அது படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுக்கு சொந்தமான இடம்.

கேம் சேஞ்சர் படத்திலும் அந்த இடத்தில் தான் செட் அமைத்து “ஜருகண்டி” என்ற பாடலை இயக்கி உள்ளார் ஷங்கர். மொத்தமாக இந்த இடம் 120 ஏக்கர்கள் பரப்பளவு கொண்டதாம். இதை அடமானம் வைத்து தான் தில்ராஜ் பணம் புரட்டியுள்ளார்.

இப்பொழுது வாங்கிய கடனுக்காக பைனான்சியர் இந்த வீட்டை எடுத்துக் கொண்டாராம். தெலுங்கு சினிமாவிற்கு பல கட்டங்களில் இந்த வீடு உதவி செய்து இருக்கிறது. ஆனால் இப்பொழுது மெகா பட்ஜெட்டில் உருவான கேம் சேஞ்சர் படத்தால் பறிபோனது.

Trending News