வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கேம் சேஞ்சர் படத்தை பகடைக்காயாய் வைத்து மிரட்டப்பட்ட தில்ராஜ்.. வசமா மாட்டிக்கொண்ட ஷங்கர்

ஷங்கர் இயக்கிய பல படங்களின் கலவை தான் கேம் சேஞ்சர் படம் என விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஆந்திரா மற்றும் ஹிந்தி பக்கத்தில் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் தமிழில் வழக்கமான சங்கர் படம் என்கிறார்கள்.

ஒரு பக்கம் இந்த படத்திற்கு அல்லு அர்ஜுன், ஜூனியர் என் டி ஆர் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளித் தெளிக்கின்றனர். மறுபக்கம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது, ஆனால் இதில் மாட்டிக் கொண்டது என்னமோ இயக்குனர் ஷங்கர் தான்.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் இந்தியன் 2 அந்தப் படத்தால் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து விட்டது, இனிமேல் அவர் படங்கள் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஒரே டிராக்கில் தான் செல்கிறார் என்றெல்லாம் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இப்பொழுதும் அதே பாணியில் தான் இந்த கேம் சேஞ்சர் படத்தையும் எடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் தில்ராஜ் பெரிய துன்பத்தை அனுபவித்து இருக்கிறார். அவருடைய பல சொத்துக்களை அடமானம் வைத்து தான் இந்த படத்திற்கு பைனான்ஸ் புரட்டி இருக்கிறார்.

இதற்கிடையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட படம் HD பிரிண்ட் இல் வெளிவந்தது. இதை வைத்து தில்ராஜிடம் பணம் பறிப்பதற்கு ஒரு கும்பல் 5 கோடி வரை பேரம் பேசி உள்ளது. ஆனால் அதற்கெல்லாம் அவர் மசியவில்லை. அந்த படமும் HD பிரிண்ட் இல் வெளிவந்தது மட்டுமில்லாமல் லோக்கல் கேபிள் டிவியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Trending News