புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆமா நீங்க பெரிய உலக அழகி.. பிக்பாஸ் சூனியக்கார கும்பலை வெளுத்து விட்ட தினேஷ்

Biggboss 7: ஆஹா ஆட்டம் சும்மா களைக்கட்டுதே என பிக்பாஸ் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அத்துமீறி அராஜகம் செய்யும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு, நிக்சன் ஆகியோருக்கு எதிராக தற்போது ஒரு அணி உருவாகி இருக்கிறது. விட்டா பிக்பாஸுக்கே ஆர்டர் போடும் அளவுக்கு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது இந்த கோஷ்டி.

இதை எதிர்த்து விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் மூவரும் இப்போது சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிலும் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் வேற லெவல் ஆக இருக்கிறது. இதன் மூலம் பிக்பாஸ் சரியான நாரதர் வேலை பார்த்திருக்கிறார். அதாவது வீட்டில் போட்டியாளர்கள் புறணி பேசிய வசனங்கள் அனைத்தும் இப்போது குறும்படமாக காட்டப்பட்டுள்ளது.

அதில் நிக்சன் வசமாக மாட்டியது குதூகலமாக இருந்த நிலையில் பிராவோவை பற்றி படுமோசமாக கமெண்ட் அடித்த சூனியக்காரிகளும் சிக்கி இருக்கின்றனர். அதாவது அவர் பெண்களை கீழிருந்து மேலாக தவறாக பார்க்கிறார் என்று பெண்கள் கோஷ்டி குறை கூறி இருந்தது. இதை பார்க்கும் போதே, “உலக அழகி நாங்க தான்”. “வீட்ல இருக்குற எல்லாரும் எங்களை தான் ஜொள்ளு விடுறாங்க” என்பது போல் இருந்தது.

Also read: முதல்ல ஆம்பளைங்க கற்புக்கு கேரண்டி கொடுங்க ஆண்டவரே.! நாராசமாக பேசும் பிக்பாஸ் அராத்திகள்

அவர்களின் இந்த கமெண்டுக்கு பிராவோ நா எப்ப உங்களை அப்படி பார்த்தேன் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஐஷு சும்மா ஜாலிக்காக பேசினோம் என்று கூறியது அகங்காரத்தின் உச்சம். ஆனால் அதற்கு தினேஷ் சரியான பதிலடி கொடுத்தார். அதாவது நீங்க எப்படி அப்படி சொல்லலாம். வீட்ல இருக்குறவங்க எல்லாரும் உங்களை கண்ணாலேயே ஸ்கேன் பண்ற மாதிரி சொன்னதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்.

உடனே மாயா நீங்க எங்க கேரக்டரை பத்தி தப்பா பேசுறீங்க என உரிமை குரலை கொடுக்க தொடங்கினார். உடனே இந்த வேலையெல்லாம் எங்கிட்ட செல்லுபடி ஆகாது என தினேஷ் சரியான நோஸ்கட் கொடுத்தார். அதாவது நீங்கள் சொல்வதை பார்த்தால் பிராவோ கேரக்டர் தான் டேமேஜ் ஆகி இருக்கு என்று சரியான பாயிண்ட்டை முன் வைத்தார்.

Also read: மாட்டிக்கிட்டே பங்கு இந்த அவமானம் தேவையா.! நிக்சனின் கேவலமான புத்தியை குறும்படம் போட்ட பிக்பாஸ்

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் தினேஷுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இப்போது இந்த உலக அழகிகள் என்ன பதில் சொல்லப் போறாங்க என்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. ஆனால் எப்படியும் ஆண்டவர் வார இறுதியில் இதை கண்டுகொள்ளாமல் சமாளித்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News