வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஓவர் தலைக்கனத்தில் ஆடும் விச்சு.. தலையாட்டி பொம்மையாக மாறிவரும் அச்சு, உஷாராகிய தினேஷ்

Bigg Boss season 7: பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி 50வது நாளை தாண்டி காரசாரமான சண்டையுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் எண்டரி கொடுத்ததில் இருந்து பிக் பாஸை தலைகீழாக மாறிவிட்டது. அதிலும் அர்ச்சனாவின் தைரியமான பேச்சு அனைத்தும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த வகையில் அர்ச்சனாவுடன் சேர்ந்து விசித்திராவும் அவருடைய கேமை மாற்றிக்கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பித்து ஒவ்வொருவரையும் அலற வைத்தார். முக்கியமாக மாயா மற்றும் பூர்ணிமாவின் முகத்திரையை கிழிக்கும் அளவிற்கு அர்ச்சனா மற்றும் விசித்ரா உடைய கேம் இருந்தது. அதனாலேயே மக்களிடமிருந்து அதிக கைதட்டல்களை பெற்றார்கள்.

மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல் வரும் பொழுது விசித்ரா மற்றும் அர்ச்சனா எழுந்துருச்சாலே அவர்களுக்கு அதிக கைத்தட்டலை கொடுத்தார்கள். இது உள்ளே இருக்கும் போட்டியாளருக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், பொறாமையாகவும் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கமல் கூட இந்த அளவிற்கு எதிர்பார்த்து இருக்க மாட்டார் அந்த அளவிற்கு அர்ச்சனா மற்றும் விசித்ராவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள்.

Also read: ஒரு மாதத்திற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.. ஆண்டவரை எச்சரித்த தலைவர் 

ஆனால் இதுவே தற்போது அர்ச்சனா மற்றும் விசித்ராவுக்கு கத்தியாக திரும்புகிறது. அதாவது நம்முடைய கேம் மற்றும் ஆட்டிட்யூட் மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவர்கள் நமக்கு மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இந்த யுத்தியை தொடர்ந்து நாம் பயன்படுத்தலாம் என்று அர்ச்சனா மற்றும் விசித்திரா தவறாக புரிந்து கொண்டார்கள்.

அதனால் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் பண்ணுவதும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதும் செய்து வருகிறார்கள். அத்துடன் ஓவர் தலைக்கனத்தில் ஆட்டம் போடும் அளவிற்கு விளையாடுகிறார்கள். இப்படியே போனால் கூடிய விரைவில் மக்கள் இவர்களுக்கு எண்டு கார்டு கொடுத்துடுவார்கள் என்று கமல் மறைமுகமாக நேற்று சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் தற்போது இவர்களுடைய மனநிலை மக்கள் நமக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள் என்று நினைக்கிறார்கள். அத்துடன் விசித்ரா என்ன பண்ணினாலும் சரி என்று தற்போது தலையாட்டி பொம்மையாக அர்ச்சனா பல விஷயங்களில் ஆமா சாமி போட்டு வருகிறார். இப்படியே போனால் கூடிய விரைவில் மக்கள் வெறுத்துப் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு மத்தியில் தினேஷ் நிதானமாக விளையாடுவதும், நேர்மையாக பேசியும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்து வருகிறார்.

Also read: சைக்கோவுக்கும், சைக்காலஜிக்கும் நடக்கும் யுத்தம்.. இரு அணியான பிக் பாஸ் வீடு, வெற்றி யாருக்கு.?

Trending News