வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

100 கோடி செலவு பண்ணாலும் நாங்க தான் கெத்து.. இத மட்டும் செய்யாதீங்க என கோரிக்கை வைத்த வினோத்

அஜித் நடிப்பில் மாசாக உருவாகி இருக்கும் படம் துணிவு அதிலும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் டிரைலர், போஸ்டர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி படம் எப்படி இருக்குமோ என்ற சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. படம் வரும் 11 தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் அஜித் நெகட்டிவ் கலந்த  கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

இதனாலே அஜித் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே இவர் மங்காத்தா திரைப்படத்தில் மாஸாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது வெளியாக உள்ள துணிவு படமும் நல்ல ரிச்சை கொடுக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். துணிவு பட இயக்குனர் எச் வினோத் அவர்கள் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

Also read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

அதில் சினிமாவில் டாப் ஹீரோக்களுக்கு என்று தனித்தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் ரசிகர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வேலையையும் விட்டுவிட்டு தங்களுக்குள்ளேயே போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் அஜித்தே ரசிகர்களிடம் தல என்று என அழைக்க வேண்டாம் என்று கூறி தனக்கு இருந்த ரசிகர் கூட்டத்தையும் கலைத்து விட்டார். இவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத் அவர்களும் அஜித்தை போல பேச்சிலும் எண்ணத்திலும் உரித்து வைத்துள்ளார்.

தற்போது வெளியாக உள்ள துணிவு படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அஜித்துடன் இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். இவர்களது முயற்சியில் கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய கூட்டணி என்ற பெயரை விரைவில் பெற்றுவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Also read: அஜித்தின் இயக்குனர் என்பதை நிரூபித்த வினோத்.. ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்

டாப் ஹீரோக்களுடைய ரசிகர்களாக இருப்பவர்களுக்கு தலபட இயக்குனர் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார் அதில் ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு  3 நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் ட்ரைலரை பார்த்து எந்த படம் பார்க்க வேண்டும் என்று மனதிற்கு தோன்றுகிறதோ அந்தப் படத்திற்கு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் அதுதான் நீங்கள் ஹிட் படத்திற்கு கொடுக்க  வேண்டிய பிரமோஷன் ஆகும்.

இந்நிலையில் சினிமாவில் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளியானால் அப்படத்திற்கான பிரமோஷன் என்பது ரசிகர்கள் அந்தப் படத்திற்காக ஒதுக்கும் நேரமும் அர்ப்பணிப்பும் தானே தவிர ஒரு படத்திற்காக எவ்வளவு முதலீடு செய்தோம் என்பது முக்கியமில்லை என்றும் என்ன தான் 100 கோடி செலவு செய்தாலும் அந்த மாதிரியான பிரமோஷனை யாராலும் செய்ய முடியாது என்று துணிவு பட இயக்குனர் எச் வினோத் அவர்கள்  கூறியுள்ளார்.

Also read: உளறி தள்ளிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் ஹெச்.வினோத்தின் பட குழ

Trending News