சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

8 வருடத்திற்கு பின் களத்தில் குதிக்கும் அமீர்.. 49 வயது ஹீரோவை வைத்து சர்ச்சையான கதை

தமிழ் சினிமாவில் பல தரமான கதைகளை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் அமீர். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் பல விருதுகளை குவித்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் எந்த படங்களையும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் இந்த திரைப்படத்தின் கதையை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் இணைந்து எழுதுகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமீர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் ஹீரோவாக இயக்குநர் கரு பழனியப்பன் நடிக்க இருக்கிறார்.

இவரின் இயக்கத்தில் வெளியான பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே மந்திரப் புன்னகை என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த இவர் தற்போது அமீர் இயக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த திரைப்படம் ஒரு மத சம்பந்தப்பட்ட பிரச்சனையை மையப்படுத்தி எடுக்க இருப்பதாக இதன் துவக்க விழாவில் இயக்குனர் அமீர் தெரிவித்திருந்தார். மேலும் அவர் அனைத்து மதங்களுக்கு இடையே இருக்கும் அழகான உறவுகளை பற்றி தான் இந்த படம் சொல்லப்போகிறது என்றும் கூறினார்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமீர், நாத்திகவாதியான கரு பழனியப்பனை வைத்து இயக்கப் போகும் இந்த திரைப்படம் ரசிகர்களை ஒரு வித எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவரின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News